தங்கள் செல்ல மகள் வாமிகாவுடன் அற்புதமான வாழ்க்கையைக் கொண்டாடி வருவட்தைப் பல இடங்களில் பதிவு செய்து வருகிறது அனுஷ்கா ஷர்மா - விராட் கோஹ்லி ஜோடி. தங்கள் குழந்தையின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதுகாத்து வரும் இந்தத் தம்பதியினர் பெரும்பாலும் வாமிகாவின் வருகைக்குப் பிறகு இருவரின் உலகமும் முழுவதும் மாறியிருப்பதைப் பதிவு செய்ய தவறுவதில்லை. சமீபத்திய நேர்காணல் ஒன்றில், விராட் கோஹ்லி தன் மகளுடனான உணர்வுகளை வார்த்தைகள் எதுவும் இன்றி, படம் வரைந்து வெளிப்படுத்தியுள்ளார். 


தற்போதைய ஐபிஎல் போட்டிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைச் சேர்ந்த மிஸ்டர் நாக்ஸ் கதாபாத்திரத்தின் டேனிஷ் சேட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியுடனான ஜாலியான உரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளார். அதில், விராட் கோஹ்லி தனது மகிழ்ச்சியான பக்கங்கள் குறித்து பேசியுள்ளார். இறுதியில் விராட் கோஹ்லியிடம் ஒரு பேப்பரும், ஸ்கெட்ச் பேனாவும் வழங்கப்பட்டு, அவரைப் பொருத்த வரையில் சுதந்திரம் என்றால் என்ன என்னவென்று வரைவதற்குக் கூறப்பட்டது. 



உடனடியாக வரைவதில் ஈடுபட்ட விராட் கோஹ்லி, மலைகளையும், ஆறு ஒன்றையும், அதன் கரையோரம் சிறிய வீடு, அதோடு மூன்று மனிதர்களையும் வரைந்து அதனை விவரித்துள்ளார். `இது நாங்கள் மூவர்.. ஏதோ ஒரு மலை அடிவாரத்தில், ஆற்றின் ஓரத்தில் உள்ள வீடு இது’ என விராட் கோஹ்லி கூறியுள்ளார். 






இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.