தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பாலஜங்கமனஅள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (22) என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த பெண்ணிற்கு, மதுபோதையில் இருந்த ராஜேஷ் பாலியல் தொந்யதரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது அந்த பெண் கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். இதனையறிந்த ராஜேஷ் தப்பியோடியுள்ளார். இதனை தொடர்ந்து பாலியல் தொந்தரவுக்குள்ளான பெண்ணை, மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அப்பொழுது ராஜேஷ், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று, ஓரிடத்தில், அமர்ந்திருந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பெண்ணின் சகோதரன் சென்னன் என்பவருக்கு தெரிந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சென்னன், தருமபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் ராஜேஷ் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று, தான் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த நாஜேஷ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
இதனை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்திலேயே இந்த சம்பவம் நடந்ததால், மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக ராஜேஷ் தூக்கிச்சென்று மருத்துவமனையில் சோதித்து பார்த்ததனர். ஆனால் ஏற்கனவே ராஜேஷ் உயிரிழந்தது தெரிய வந்தது. எப்பொழுதும் பெரும்பாலான பொதுமக்கள், நோயாளிகள் என பரபரப்பாக இருக்கும் தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஒரு இளைஞனை அடித்து கொலை செய்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் சகோதரிக்கு பாலியல் தொந்நரவு கொடுத்தவரை கொலை செய்துவிட்டு அதே இடத்தில் சென்னன் இருந்துள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து தருமபுரி நகர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சென்னனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை நடந்த தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கொலை சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள், ஆய்வு செய்து, தடயங்களை சேகரித்தனர்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பாதிக்கபட்ட பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இடத்திலே, பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரை, சகோதரன் அடித்து கொலை செய்த சம்பவம், தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிகையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் காவல்துறையினர் தீவிர விசாரனையை மேற்கொண்டு வருகிறார்கள்.