Viral Video: இந்திய வீரர் விராட் கோலியுடன், நடிகர் ஷாருக்கான் நடனமாடி முத்தமிட்ட வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
கொல்கத்தா அணி வெற்றி
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 9வது லீக் போட்டியில் டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணியும் நேற்று மோதின. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீசை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 204 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து, களமிறங்கிய பெங்களூரு அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி 4 விக்கெட்டுகளையும் ,சுயாஷ் சர்மா தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். நடப்பு தொடரில் கொல்கத்தா அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
கோலிவுடன் ஷாருக்கான்
இந்த போட்டியை நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மகள் பாப் பாடகர் உஷா உதுப் ஆகியோர் நேரில் சென்று கண்டு களித்தனர். இந்த போட்டி முடிந்து பிறகு, ஷ
இந்நிலையில், இந்த போட்டி முடிந்த பிறகு ஷாருக்கான் மைதானத்துக்குள் சென்று கொல்கத்தா வீரர்களை சந்தித்து மகிழ்ச்சியை தெரிவித்தார். விராட் கோலியை பார்த்தவுடன் வேகமாக வந்து கட்டிப்பிடித்து ஷாருக்கான் நலம் விசாரித்தார். பிறகு விராட் கோலியுடன் இணைந்து, பதான் படத்தில் இடம்பெற்றிருந்த பாடலுக்கு நடனம் ஆடினார். இதற்கான வீடியோக்களும் புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.