தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் தேர்திருவிழா தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் தேர் திருவிழா நடைபெறும் 15 நாட்களும் மாட்டுச் சந்தையும் நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் சுமார் 15 நாட்கள் நாட்டின மக்கள் மாடுகள் விற்பனை சந்தை நடைபெறும். இந்த சந்தைக்கு தருமபுரி மாவட்டத்தை சுற்றியுள்ள கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு வகையான நாட்டு மாடுகள் விற்பனைக்கு வரும். இங்கு நாட்டு மாடுகளை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் ஏராளமான விவசாயிகளும் வியாபாரிகளும் இரண்டு நாட்கள் முன்பாகவே வந்து தங்கி இருந்து நாட்டின மாடுகளை வாங்கி செல்வார்.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பேரிடர் காலத்தில் திருவிழா மற்றும் மாட்டு சந்தை நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு மீண்டும் தேரோட்ட திருவிழாவும் நடைபெற்று வருகிறது. அதனை ஒட்டி நாட்டு மாட்டுச்சந்தையும் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளில் தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மாடுகளின் வரத்தும் அதே அளவு விற்பனையும் நடைபெற்ற வந்த நிலையில் இந்த ஆண்டு வெளி மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் மாடுகளை வாங்குவதற்கு பெரிய அளவில் ஆர்வம் காட்டாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு அதியமான் கோட்டை காளியம்மன் கோவில் திருவிழாவில் 5000 மேற்பட்ட நாட்டின மாடுகள் விற்பனைக்கு வந்த நிலையில், இந்தாண்டு மாடுகளும் விற்பனைக்கு குறைந்த அளவில் வந்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட காளை வகைகளும், மாடுகளும் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் நல்ல விற்பனை இருக்கும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் விற்பனை மந்தமாகவும் கேட்பதற்கு ஆள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மாடுகள் தேவை குறைவாக இருப்பதால் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மாடுகள் 50 முதல் 70 வரை விலை மதிக்கப்படுகிறது. இதனால் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்த மாடு வளர்ப்போர் வேதனை அடைந்துள்ளனர்.
அதேபோல் மாடுகள் குறைவாக இருப்பதால் விலை உயர்ந்துள்ளது இதனால் வியாபாரிகளும் நாட்டின மாடுகளை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். நாட்டு மாடுகளை பொறுத்த வரை அதிக அளவில் விவசாய நிலங்களில் ஏர் உழுவதற்கும் அதிக அளவில் பயன்படுத்துகின்ற நிலையில் தற்பொழுது அதிலிருந்து மாற்றம் ஏற்பட்டு டிராக்டர் போன்ற சாதனைகளை பயன்படுத்தியதால் அதிக அளவில் நாட்டு மாடுகள் வளர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது தற்போது ஜல்லிக்கட்டு தமிழக முழுவதும் பிரசித்தி பெற்று அனைத்து மாவட்டங்களில் நடைபெற்று வந்தாலும் இன்று அதியமான் கோட்டையில் நடைபெறும் மாட்டுச் சந்தையில் மாடுகள் விற்பனை மற்றும் காளைகளின் விற்பனை குறைந்து காணப்பட்டுள்ளது.