இணையதளத்தில் உலாவும் போது சில நேரங்களில் நம் கைகளில் க்யூட் வீடியோக்கள் சிக்கும். அப்படியொரு வீடியோ சிக்கி வைரலாகி வருகிறது.


ஒரு செல்போன், அதற்கு ஒரு கைக்குழந்தையும், குட்டிக் குரங்கும் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சி அது. சண்டை என்றால் நீங்கள் நினைப்பதுபோல் கைகலப்பு எல்லாம் இல்லை. குழந்தையிடமிருக்கும் செல்ஃபோனை குட்டிக் குரங்கு பறித்துக் கொள்ளும். அதையே பின்னர் குழந்தை பறிக்கும். குழந்தையிடமிருந்து செல்ஃபோனை வாங்கும் குரங்கு ஏதோ முணுமுணுப்பதைக் காணலாம். குரல் தான் வரவில்லையே தவிர ஏதோ வசைபாடுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அதேபோல் அந்தக் குரங்கு செல்ஃபோனை நெஞ்சோடு அனைத்துக் கொண்டு இது என்னுடையது என்பதுபோல் ஒரு பார்வை பார்க்கும் பாருங்கள். சும்மா அள்ளும் அழகு.


அந்த க்யூட் வீடியோவின் கீழ் இணையவாசிகள் பல சுவாரஸ்ய கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.


ஒருவர், குரங்கு கூட சொல்கிறது செல்ஃபோன் குழந்தைகளுக்கானது இல்லை என்று பதிவிட்டுள்ளார்.


இன்னொருவர், க்யூட் வீடியோ. புத்திசாலி குரங்கு என்று பதிவிட்டுள்ளார்.


இப்படியாக பலரும் பல கருத்துகளைப் பகிர இப்போது வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா என இந்த வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கிறது.


விலங்குகளில் வீடியோக்களை வைத்தே ஃபன்னி அனிமல் வீடியோஸ் என்ற நிகழ்ச்சியே ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் வரும். அதில், நாய், பூனை, குரங்கு, அணில், எலி, கிளி எனப் பல்வேறு செல்லப் பிராணிகளும் செய்யும் சேஷ்டைகள் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.


வெளிநாடுகளில் பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டிலும் ஏதேனும் ஒரு செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர். ஐரோப்பிய நாடுகளில் தெரு நாய்களைப் பார்க்க முடியாதாம். ஒவ்வொரு நாய்க்கும் ஒரு உரிமையாளர் இருப்பார்களாம். இல்லாவிட்டால் அவை பராமரிப்பு நிலையங்களில் பராமரிக்கப்படுமாம்.


உலகிலேயே இந்தியாவில் தான் தெரு நாய்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம் எனக் கூறுகிறது ஒரு புள்ளிவிவரம். உண்மையில் செல்லப் பிராணிகளை வளர்ப்பது மனதுக்கு ஒருவகை ஆறுதல் தரும். மனதிற்கு ஆறுதல் தரும் விஷயங்களை தயங்காமல் செய்யலாம். ஒரு விலங்கை பராமரித்ததாகவும் இருக்கும் அதே வேளையில் நாம் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் இருக்கும்.


சரி இந்தச் செய்தியை படிப்போது நிற்காமல் க்யூட் பேபி, குட்டிக் குரங்கு சண்டைக் காட்சி வீடியோ அடங்கிய இதை வேகமாக ஷேர் செய்யுங்க பார்க்கலாம்.


எல்லாம், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற எண்ணம் தான். மறக்காம இதை ஷேர் பண்ணிடுங்க.