டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று கொடுத்ததன் மூலம் மீராபாய் சானு, உலகளவில் இந்தியாவிற்கு பெருமை தேடி கொடுத்துள்ளார். மீராபாய் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு பளுதூக்குதலில் ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ளார். அவரது இந்த சாதனை நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு ஊக்கமளிக்கும், மேலும் வரும் தலைமுறையினர் விளையாட்டு மீதான அவர்களின் அணுகுமுறையை மாற்றி இந்தத் துறையில் முன்னேறுவார்கள். சின்ன குழந்தைகள் மீராபாய் சானுவிடம் இருந்து உத்வேகம் பெறுகிறார்கள். இந்த நிலையில், வெயிட் லிஃப்டர் சதீஷ் சிவலிங்கம் மீராபாய் சானு போன்ற பளுதூக்குதல் செய்யும் ஒரு சின்னக் குழந்தையின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ மிக வேகமாக வைரலாகி வருகிறது.


சுமார் 5 வயதுடைய அக்குழந்தை டிவியின் முன்பு பளு தூக்குதல் செய்கிறார் என்பதை வீடியோவில் காணலாம். மீராபாய் சானு தொலைக்காட்சியில் பின்னால் ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் செய்கிறார், சானுவைப் போலவே, அந்த சிறுமியும் டிவிக்கு முன்னால் பளுதூக்குதல் செய்கிறார். அதன் பிறகு சானு போன்ற சந்தோஷமாக கைகளை அசைத்து பதக்கம் அணிந்துகொள்கிறாள். குழந்தையின் இந்த வீடியோவுக்கு மீராபாய் சானு பதிலளித்துள்ளார்.


இந்த வீடியோவுக்கு பதிலளித்த மீராபாய் சானு, “இது மிகவும் அழகாக இருக்கிறது, மிகவும் இனிமையானது” என்று கூறியுள்ளார்.









ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற நாட்டின் முதல் தடகள வீரர் மீராபாய் சானு ஆவார். பதக்கம் வென்ற பிறகு, மீராபாய் நேற்று இந்தியா திரும்பினார், டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்த மக்கள், ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று கோஷமிட்டனர். மீராபாய் சானுவுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து கூறியிருந்தார்.






2000-ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் கர்ணம் மல்லேஸ்வரி கடைசியாக வெண்கலப் பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கைப் பற்றிப் பேசும்போது, ​​இந்தியாவின் கணக்கில் இதுவரை வந்த ஒரே பதக்கம் மிராபாய் சானுவின் பதக்கம் மட்டுமே. இருப்பினும், இந்தியா பதக்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது.


Mirabai Chanu Wins Medal: இந்தியாவிற்கு முதல் பதக்கம்: பளுதூக்குதலில் மீராபாய் சானுக்கு வெள்ளி ! பிரதமர் மோடி வாழ்த்து!