தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகியுள்ள படம் “லியோ”. இந்த படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், இயக்குநர்  மிஷ்கின், அர்ஜூன், பிக்பாஸ் ஜனனி,  அபிராமி வெங்கடாச்சலம், சாண்டி மாஸ்டர்,மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி என ஏகப்பட்ட பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். லியோ படத்தை செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் ”ராக் ஸ்டார்” அனிருத் இசையமைத்துள்ளார். 


இதனிடையே லியோ படம் நாளை (அக்டோபர் 19) உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பல இடங்களில் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டது. அதேசமயம் லியோ படத்துக்கு அதிகாலை 4 மணி மற்றும் காலை 7 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு அரசிடம் தயாரிப்பு நிறுவனம் வேண்டுகோள் விடுத்தது. ஆனால் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டதால் காலை முதல் காட்சி 9 மணிக்கு தமிழ்நாட்டில் திரையிடப்பட உள்ளது. 




அதேசமயம் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் லியோ படம் வெளியாகவுள்ளது. இதில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி திரையிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டின் எல்லையில் இருக்கும் ரசிகர்கள் பக்கத்து மாநிலத்துக்கு படையெடுத்து வருகின்றனர்.


இந்த சூழலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த பகுதி விஜய் மக்கள் இயக்கத்தினர் லியோ திரைப்படம் வெற்றி பெற வித்தியாசமான முறையில் லியோ படத்தினை வரவேற்றுக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம், காமராஜர் வீதியில் அமைந்துள்ள பெஸ்ட் மென் வேர்ஸ் கடையில், ஐந்து நிமிடத்தில் லியோ படத்திற்கான டி-ஷர்ட்கள் பிரிண்ட் செய்து விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த டி-ஷர்ட்களில் லியோ படத்தில் இடம் பெறும் He is a freakin Badass,LEO, Glittering டைப் டி-ஷர்ட், விஜய் உருவப்படம்  போன்ற பல வகைகளில் லியோ படத்திற்கான டீ -ஷர்ட்கள் தயாராகி வருகிறது.




ஒவ்வொரு டீ -ஷர்ட்டு விலையும் 300 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஸ்மால் சைஸ் முதல் பெரிய சைஸ் வரை டீ-ஷர்ட்கள் இருக்கிறது என கடை உரிமையாளர்கள் தெரிவித்தார். இதற்கான ஆர்டர்கள் அதிக அளவில் ஆன்லைன்களில் வந்துள்ளது எனவும் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட  டீ -ஷர்ட்கள் விற்பனையாகியுள்ளது எனவும், இளைஞர்கள் அதிகளவில்  லியோ பட டீ-ஷர்ட்  வாங்கி செல்வதாகவும் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். மேலும் ஐந்து நிமிடத்தில் வாடிக்கையாளர்கள் கேட்கும் வகையில்  லியோ பட டீஷர்ட்கள் பிரிண்ட் செய்து தருவதால் வாடிக்கையாளர்கள் கடையில் குவிந்து வருகிறார்கள்.  பெஸ்ட் மென் வேர்ஸ் ( BEST MEN WEAR'S ), காமராஜர் வீதி,தொடர்பு எண் : 7845449608, இன்ஸ்டாகிராம் ஐடி : Bestmenwears_tn32