பழனி அருகே ஆயக்குடி பகுதியில் அனுமதி இன்றி மண்ணள்ளியபோது தடுத்து நிறுத்திய விஏஓ மற்றும் உதவியாளர் மீது லாரி ஏற்றிக் கொல்ல முயன்ற புகாரில் திமுக கவுன்சிலர், அவரின் கணவர்  உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.


திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பொன்னிமலை சித்தன் கரடு பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்பு அனுமதியின்றி அள்ளி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி அவருடைய உதவியாளர் மகுடீஸ்வரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் வேறு ஒரு இடத்திற்கான நடை சீட்டை பயன்படுத்தி மண் அள்ளப்பட்டது தெரியவந்ததை அடுத்து லாரிகளை காவல் நிலையத்திற்கு எடுத்து வருமாறு கூறியுள்ளனர்.


Latest Gold Silver: தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.360 அதிகரிப்பு.. இன்றைய தங்கம் வெள்ளி விலை என்ன?




அப்போது லாரியை எடுத்துக்கொண்டு காவல் நிலையம் நோக்கி லாரிகள் முன்னால் செல்ல பின்னால் விஏஓ உதவியாளர் சென்று கொண்டிருக்கும்போது பொலிரோ ஜீப்பில் வந்த நான்கு பேர் விஏஓ மீது வாகனத்தை ஏற்றுவது போலவும் வலது புறமும் இடது புறமும் சினிமா காட்சிகள் போல் வாகனத்தை செலுத்தியதால் வாகனத்திற்கு வழி விடாமல் சென்றுள்ளனர். இதில் நிலை தடுமாறிய விஏஓ அச்சத்தில் ஆயக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்  சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் மீதும் மண் அள்ளிய குண்டர்கள் லாரிகளை மோதுவது போல் சென்றுள்ளனர்,


Morning Headlines: மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ்.. தெலங்கானா சட்டமன்ற தேர்தலுக்கு தயாரான காங்கிரஸ்.. இன்றைய முக்கிய செய்திகள்..




மேலும் லாரிகளில் இருந்த மண்ணை இருசக்கர வாகனத்தில் வந்த விஏஓ மற்றும் உதவியாளர் மகுடீஸ்வரன் மீதும் மண்ணை கொட்டியவாரு சென்றுள்ளனர். இதனால் காவல் ஆயக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் தப்பி ஓடிய நான்கு பேரையும் மீதும் போலீசார் தேடி வந்தனர். இதனை தொடர்ந்து விஏஓ சங்கத்தினர் இவர்களை கைது செய்ய வேண்டும் ,பணி பாதுகாப்பு வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர் . மேலும் 4 நாட்களாக போலீசார் தேடி வந்ததில்  பாலசமுத்திரம் திமுக கவுன்சிலர் ரமேஷ் அவரது தந்தை சக்திவேல் , காளிமுத்து திமுக கவுன்சிலரின் கணவர் பாஸ்கரன் உள்ளிட்டவர்களை போலீசார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.


Israel - Hamas War: மடிந்த மனிதம் - நள்ளிரவில் காஸாவில் நிகழும் இனப்படுகொலை? - உலக நாடுகள் கடும் கண்டனம்