வீர தீர சூரன் படத்திற்கு இடைக்கால தடை

எஸ்.யு அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ஆக்‌ஷன் த்ரில்லர் படம் வீர தீர சூரன். எச் ஆர் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் துஷாரா விஜயன் , எஸ் ஜே சூர்யா , சூரஜ் வெஞ்சமூடு உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று திரையரங்கில் வெளியாக இருந்த நிலையில் படத்திற்கு திடீரென்று இடைக்கால தடை விதிக்கப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. 

Continues below advertisement

படத்தின் தயாரிப்பு நிறுவனம் எச் ஆர் பிக்ச்சர்ஸ் மற்றும் பி4யு மீடிடியா இடையிலான பிரச்சனையே இந்த இடைக்கால தடைக்கு காரணம். ஓடிடி ரிலீஸ் தேதியை முடிவு செய்வதற்கு முன்பே படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்ததால் இரு நிறுவனத்திற்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றன் வீர தீர சூரன் படத்திற்கு மார்ச் 27 ஆம் தேதி காலை 10:30 வரை தடை உத்தரவு பிறப்பித்தது. இதனால் காலை 9 மணி காட்சிப் பார்க்க டிக்கெட் புக் செய்து ஆர்வமாக காத்திருந்த விக்ரம் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு கோபத்திற்கு ஆளாகியுள்ளார்கள். இந்தியாவில் மட்டுமில்லாமால் வெளி நாடுகளிலும் படத்தின் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை காட்சிகளுக்கு டிக்கெட் புக் செய்தவர்களின் பணம் புக் மை ஷோவினரால் திருப்பி தரப்படும். 

படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுமா ?

10:30 வரை தடை உத்தரவு இருப்பதால் 11 மணி முதல் வீர தீர சூரன் படத்தின் முதல் காட்சிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப் பட்டது. காலை காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த பெரும்பாலான ரசிகர்கள் தங்கள் அலுவலக பணிகளுக்கு மத்தியில் 11 மணி காட்சிக்காக காத்திருந்தார்கள். தற்போது 11 மணி காட்சியும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் முதல் காட்சி இன்று மாலை தொடங்கலாம் இல்லையென்றால் நாளை படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Continues below advertisement

ஏற்கனவே வீர தீர சூரன் படத்திற்கு சுமாரான ஓப்பனிங்கே இருந்த நிலையில் தற்போது இந்த பிரச்சனையும் படத்திற்கு கூட்ட வரத்தை பாதித்துள்ளது. படத்திற்கு எல்லா பக்கமிருந்து பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியாகினால் மட்டுமே இந்த தடைகளைக் கடந்து படம் வசூல் ரீதியாக வெற்றி பெறும் என விக்ரம் ரசிகர்கள் மற்றும் படக்குழு எதிர்பார்த்து காத்திருக்கிறது.