சிறகடிக்க ஆசை

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர் தான் தற்போது இணையத்தில் ஹாட் டாபிக். இந்த தொடரில் நடித்து வரும் ஸ்ருதி நாராயணனி ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் காட்டுத்தீப் போல் பரவி வருகிறது. கடந்த ஆண்டு ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இந்த வீடியோ தற்போது மறுபடியும் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. 

பட வாய்ப்பிற்காக ஏஜேண்ட் செய்த குரூரம்

தற்போது இணையத்தில் ஸ்ருதி நாராயணனின் வீடியோ என்று பகிரப்படும் வீடியோவில் வீடியோகால் மூலம் அவர் ஒரு நபரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நபர்தான் இந்த வீடியோவையும் வெளியிட்டிருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.  பட வாய்ப்பு தருவதாக சொல்லி  இந்த மாதிரியான செயலுக்கு ஸ்ருதி வற்புறுத்தப் பட்டிருக்கலாம் என்கிற கேள்வி எழுந்துள்ளது. திரைத்துறையில் காலம் காலமாக காஸ்டிங் கவுச் இருந்து வருவது பற்றி பலர் குரல் கொடுத்து வருகிறார்கள். 

சமீபத்தில் ஹேமா கமிட்டி வெளியானபோது தமிழ் திரையுலகில் இந்த மாதிரியான செயல்கள் நடப்பதில்லை என்று பெண்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்த பட்டுள்ளது என்று நடிகர் சங்கம் சார்பாகவும் தயாரிப்பாளர் சங்கம் சார்பாகவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது வெளியான இந்த வீடியோவால் திரைத்துறையில் மீண்டும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதுகுறித்து சம்பந்தபட்ட நடிகை இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. 

திரையுலகினர் மெளம் காப்பது ஏன்

இது தொடர்பாக திரைத்துறையைச் சேர்ந்த பெரும்பாலானவர் மெளம் காத்து வருகிறார்கள். பாடகி சின்மயி இது குறித்த தனது கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்