IPL 2025 Points Table: ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியல் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியின் மூலம் எப்படி மாறியுள்ளது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2025

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். குறிப்பாக முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு, இறுதிப்போட்டிக்கு செல்ல இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும். அதனால், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க 10 அணிகளும் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியின் முடிவால், புள்ளிப்பட்டியல் எப்படி மாறியுள்ளது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானை சாத்தி எடுத்த கொல்கத்தா:

நேற்று நடைபெற்ற லீக் போடிட்யில் நடப்பௌ சாம்பியனான கொல்கத்தாவை, ராஜஸ்தான் அணி எதிர்கொண்டது. இரு அணிகளுமே முதல் போட்டியில் தோல்வியுற்றதால், கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கின. ஆனால், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் சொதப்பியதால், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை மட்டுமே எடுத்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணி, 17.3 ஓவர்கள் முடிவிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய டிகாக் இறுதிவரை ஆட்டமிழக்காமல், 97 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில், 6வது இடத்திற்கு முன்னேறியது.

ஐபிஎல் 2025 - புள்ளிப்பட்டியல் நிலவரம்:

அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளிகள்
ஐதராபாத் 1 1 0 2
பெங்களூரு 1 1 0 2
பஞ்சாப் 1 1 0 2
சென்னை 1 1 0 2
டெல்லி 1 1 0 2
கொல்கத்தா 2 1 1 2
லக்னோ 1 0 1 0
மும்பை 1 0 1 0
குஜராத் 1 0 1 0
ராஜஸ்தான் 2 0 2 0

ஐதராபாத்தை எதிர்கொள்ளும் லக்னோ

ஐதராபாத்தில் உள்ள பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமான ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இன்றைய லீக் போட்டியில், ஐதராபாத் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. வலுவான பேட்டிங் ஆர்டர் மூலமாக, அசுரத்தனமாக ரன் குவித்து வரும் ஐதராபாத் அணியை, முதல் போட்டியில் தோல்வியை கண்ட ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி வீழ்த்துமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், ஐதராபாத் அணி தனது முதல் இடத்தை வலுவாக தக்க வைக்கும். அதுவே லக்னோ அணி வெற்றி பெற்றால் அதிகபட்சம் 6வது இடம் வரை முன்னேறலாம். இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.