வீர தீர சூரன் ஓடிடி ரிலீஸ்

எஸ்.யு அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்த திரைப்படம் வீர தீர சூரன். எஸ்.ஜே.சூர்யா , துஷாரா விஜயன் , சூரஜ் வெஞ்சரமூடு ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். எச் ஆர் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த மார்ச் 27 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியான நிலையில் தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது

ரிலீஸில் சர்ச்சை

மார்ச் 27 ஆம் தேதி வெளியாக இருந்த வீர தீர சூரன் படம் சில பிரச்சனைகளை எதிர்கொண்டது. எச் ஆர் பிக்ச்சர்ஸ் இப்படத்தை B4U மீடியாவுடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. படத்தின் ஓடிடி விற்பனைக்கு முன்பே ரிலீஸ் தேதியை அறிவித்ததால் B4U மீடியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதனால் படத்தின் காலை மற்றும் மதிய காட்சிகள் தடைபட்டு மாலை முதல் திரையிடல் தொடங்கியது. இதனால் படத்தின் முதல் நாள் வசூல் பெரியளவில் பாதிக்கப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வரவே வசூலில் முன்னேற்றம் ஏற்பட்டது. 

வீர தீர சூரன் வசூல் 

வீர தீர சூரன் திரைப்படம் இந்தியளவில் ரூ 49.45 கோடி வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. இப்படத்தின் மொத்த பட்ஜெட் 55 கோடி என கூறப்படுகிறது. படம் ரிலீஸில் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியாகியதால் வீர தீர சூரன் குறைவான வசூலுக்கு காரணமாக கூறப்படுகிறது. 

அமேசான் பிரைமில் 

வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ஓடிடியில் வெளியான பின் படத்தின் நிறைய புதிய முயற்சிகளுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.