நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க நான் தயார் எனவும் ஆனால் ரஜினியிடம் கேட்க வேண்டும் எனவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். இப்படம் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இதையடுத்து விக்ரம் படக்குழு இப்படத்தின் வெற்றியை பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.




இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க தயாரா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் “ரஜினியுடன் இணைந்து நடிக்க நான் தயார். அதற்கு முன்னதாக லோகேஷ் கனகராஜிடமும் ரஜினியிடமும் கேட்க வேண்டும்” என பதிலளித்தார்.






விக்ரம் - வசூல் வேட்டை 


நடிகர் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான  ‘விக்ரம்’ திரைப்படம் உலக அளவில் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை ரூ.5 கோடியை தாண்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


இது குறித்து திரைத்துறை ஆர்வலர் ஸ்ரீதர் பிள்ளை தனது ட்விட்டர் பக்கத்தில், “ விக்ரம் திரைப்படம் உலக அளவில் 150 கோடியும். இந்திய அளவில் 100 கோடிக்கு மேலும் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்றிற்கு பிறகு மிகப் பெரிய வெற்றியை பெற்ற படங்களின் பட்டியலில்  விக்ரம்  திரைப்படம் இணைந்திருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் விக்ரம் திரைப்படம் தலைநகரான சென்னையில் மட்டும் ரூ.5 கோடியை தாண்டிவிட்டதாகவும், இதே வேகத்தில் சென்றால் நிச்சயம் சென்னையில் மட்டுமே 15 கோடியைத் தாண்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


 




Nayanthara Vignesh Shivan Marriage LIVE: முடிந்தது திருமணம்... தொடங்கியது விருந்து... குஷியில் நயன்தாரா-விக்கி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண