Nayanthara Vignesh Shivan Marriage LIVE: நாளை திருப்பதி செல்லும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி
Nayanthara Vignesh Shivan Marriage LIVE Updates: நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் இனிதே முடிந்தது...
ABP NADULast Updated: 09 Jun 2022 09:08 PM
Background
Nayanthara Vignesh Shivan Wedding LIVE:பிரபல நடிகை நயன்தாரா - பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் காதல் திருமணம் மாமல்லபுரத்தில் ஜூன் 9 அன்று நடைபெறவுள்ளது. நானும் ரெளடி தான் படத்தின் உருவாக்கத்தின் போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலர்கள்...More
Nayanthara Vignesh Shivan Wedding LIVE:பிரபல நடிகை நயன்தாரா - பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் காதல் திருமணம் மாமல்லபுரத்தில் ஜூன் 9 அன்று நடைபெறவுள்ளது. நானும் ரெளடி தான் படத்தின் உருவாக்கத்தின் போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலர்கள் ஆனார்கள். சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியானது. இயக்குநர் விக்ஷேன் சிவன் லால்குடியைச் சேர்ந்தவர். நயன்தாரா கேரளாவைச் சேர்ந்தவர். இவர்களின் காதல் திருமணம் ஜூன் 9 அன்று மாமல்லபுரத்தில் உள்ள sheraton grand நடைபெறவுள்ளது.நானும் ரவுடிதான்நயன்தாராவை முதல் முதலில் விக்னேஷ் சிவன் பார்த்ததே நானும் ரவுடிதான் திரைப்படத்திற்கு கதை சொல்ல போகும்போதுதான். அதன் பிறகு படப்பிடிப்பில்தான் இருவருக்குள்ளும் கெமிஸ்ட்ரி உருவாகி காதலாக மாறியது. ஆனால் அந்த நேரத்தில் அதை வெளியில் சொல்லாமல் இருந்து வந்தனர். படத்தின் ஹீரோ விஜய் சேதுபதிக்கே அப்போது தெரியாது என்று கூறியிருந்தார். அதனை முதன் முதலில் ஸ்டேஜில் போட்டுக் கொடுத்தது, மன்சூர் அலி கான் தான். பட விழாவில் பேசிய அவர், "உச்சி வெயிலில் நானெல்லாம் நாலு அஞ்சு பிஸ்லேரி பாட்டில காலி பண்ணிட்டு இருப்பேன். அங்க ரெண்டு சிட்டுக் குருவிகள் உக்காந்து மணிக்கணக்கா பேசிக்கிட்டு இருக்கும்" என்று கூற விக்னேஷ் சிவன் உட்பட அனைவரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அதன் பிறகுதான் கிசு கிசுவெல்லாம் எழுத ஆரம்பித்தார்கள்.அதிகாரப்பூர்வ அறிவிப்புசிங்கப்பூரில் நடந்த சைமா விருது வழங்கும் விழாவில்தான் கிட்டத்தட்ட இருவரும் வெளிப்படையாக ஒருவரை ஒருவர் பற்றி பேசிக்கொண்டார்கள். விக்னேஷ் சிவன் சிறந்த இயக்குனர் விருது வாங்கியபோது, நயன்தாராவுக்கு நன்றி சொல்லி, அவரை சிறந்த மனிதர் என்று கூறினார். நயன்தாரா விருது வாங்கும்போதும் விக்னேஷ் சிவனுக்கு நன்றி கூறினார். இருவர் பேசும்போதும் இடைப்பட்ட மிர்ச்சி சிவா, இருவர் காதல் குறித்தும் வெளிப்படையாக கலாய்த்தார். இருவருமே அதனை நல்ல முறையில் எதிர்கொண்டதே இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததற்கு சமமாக பார்க்கப்பட்டது.கொண்டாட்டங்கள்நயன்தாரா சமூக வலைத்தளங்களில் இல்லை, ஆனால் விக்னேஷ் சிவன் எப்போதும் அவருடைய புகைப்படங்களை பதிவிட்டுக்கொண்டே இருப்பார். இருவரும் சேர்ந்து எடுத்த செல்பி, புகைப்படங்கள் என வந்துகொண்டே இருக்கும். அதுமட்டுமின்றி ஓணம் கொண்டாடுவது முதல், ஒருவர் மற்றவருடைய பிறந்த நாளுக்கு பிறந்தநாள் பார்ட்டிக்களை அரேஞ் செய்வது என்று அவர்களது கொண்டாட்டங்கள் ஒன்றாக அமைய தொடங்கின. விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவருமே கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், அடிக்கடி இந்தியா முழுவதும் உள்ள கோயில்கள், மசூதிகள், சர்ச்களுக்கு செல்வதை பழக்கமாக வைத்திருந்தனர்.
நாளை திருப்பதி செல்லும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி
திருப்பதியில் நடக்க இருந்த கல்யாணம் மகாபலிபுரத்தில் நடந்ததை தொடர்ந்து நாளை திருப்பதி செல்கின்றனர் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி. புதுமண ஜோடிகள் இருவரும் நாளை காலை திருப்பதி கோயிலில் வழிபாடு செய்ய உள்ளனர்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண புகைப்படம் வெளியானது
நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருணம் முடிந்த நிலையில், தற்போது இருவரின் திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது. இது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மண கோலத்தில் தேவதை!! லேடி சூப்பர் ஸ்டார் திருமண வைபோகத்தை கொண்டாடிவரும் ரசிகர்கள்!
மாமமல்லபுரத்தில் காதல் பறவைகள் நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சி விமர்சியாக நடைபெற்றது. பெரிதும் எதிர்பார்த்த திருமணம் நிகழ்வை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இருவருக்கும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் வாழ்த்து மழை பொழியும் நேரமிது.
டிவிட்டரில் #NayantharaVigneshShivan என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது..
நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் - ஒரு லட்சம் பேருக்கு கல்யாண விருந்து ஏற்பாடு!
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் இனிதே நிறைவடைந்துள்ளது. திருமண வரவேற்பு நிகச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விழாவில் பங்கேற்பவர்களுக்கு சுமார் ஒரு லட்சம் பேருக்கு கல்யாண விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண விழா- தங்கம் ஹேப்பி!!. இனிய வாழ்விற்கான புதிய தொடக்கம்!
மஹாபலிபுரத்தில் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் இனிதே முடிந்துள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. திரைப்பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். பலர் வருகை புரிந்த வண்ணம் இருக்கின்றன.
நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம்- நடிகை காஜல் அகர்வால் வாழ்த்து!
நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடக்கிறது. இதையெடுத்து விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள போஸ்டில் நடிகை காஜல் அகர்வால் தன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ”Congratulations to the both of you! Sending lots of love and best wishes ❤️."
நாளை மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமண நிகழ்ச்சி. நயன்தாராவின் திருமணத்தில் நடிகை சமந்தா கலந்துகொள்ளப் போவதில்லை எனத் தெரிய வந்துள்ளது.
ஆவணப்படமாகிறது நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண விழா!
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் திரைப்படமாக எடுக்கப்பட்டு அது ஓ.டிடி. தளமான நெட்ஃபிலிக்ஸில் வெளிப்படும் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. இதை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார் என்றும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் நாளை நடைபெறு திருமண நிகழ்வை ரசிர்கர்கள் பெரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
போடாபோடி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து நயன்தாரா, விஜய்சேதுபதி நடித்த ‘நானும் ரெளடிதான்’ படத்தை இயக்கினார். இந்தப்படத்தின் போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
நயன்தார - விக்னேஷ் சிவன் திருமண விழா - 200 பேர் மட்டுமே பங்கேற்க உள்ளதாக தகவல்!
நயன்தார - விக்னேஷ் சிவன் திருமண விழாவில் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 30 பேர் ரஜினி, விஜய், அஜித், நெல்சன், விஜய்சேதுபதி, சமந்தா போன்ற விஐபிக்கள் எனவும் சொல்லப்படுகிறது.
நயன்தார - விக்னேஷ் சிவன் திருமண விழா - 200 பேர் மட்டுமே பங்கேற்பு உள்ளதாக தகவல்!
நயன்தார - விக்னேஷ் சிவன் திருமண விழாவில் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 30 பேர் ரஜினி, விஜய், அஜித், நெல்சன், விஜய்சேதுபதி, சமந்தா போன்ற விஐபிக்கள் எனவும் சொல்லப்படுகிறது.
நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம்- எப்போ நடைபெறுகிற குறித்த தகவல்
நாளை மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் ஃபவ் ஸ்டார் ஹோட்டலில் காலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலான முகூர்த்த நேரத்தில் இவர்களது திருமணம் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்: செக்யூரிட்டி கோட் இருந்தால் மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதி எனத் தகவல்!
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நாளை மகாபலிபுரத்தில் உள்ள இரு ரெசாட்டில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க முக்கியமான உறவுகள், நண்பர்கள் ஆகியோருக்கு மட்டுமே அழைப்பு விடுக்ப்பட்டிருக்கிறதாம். அவர்களுக்கு ஏற்கனவே 'Securituy Code' அழைப்பிதழுடன் வழங்கப்படும் என்றும், வெரிஃபிகேசனுக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று புதிய செய்தி வெளியாகியுள்ளது. மேலும், இதில் பங்கேற் அனைவரும் அணிந்த வர வேண்டிய உடை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி- முக்கிய திரைப்பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, சூர்யா, அஜித், கார்த்தி, விஜய் சேதுபது உள்ளிட்ட பல திரைப்பிரலங்கள் பங்கேற் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.