சமீபத்தில் ட்ரெண்டாகி வரும் பாய்காட் பாலிவுட் என்ற கூற்று லால் சிங் சத்தா, ரக்ஷாபந்தன் என பல பாலிவுட் திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ்களில் கை வைத்துள்ளது. நடிகர் சியான் விக்ரம் தனது அடுத்த படமான கோப்ரா திரைப்படத்தின் ப்ரோமோஷன் செயல்களில் மும்முரமாக செயல்பட்டு கொண்டு வருகிறார்.
விக்ரம்,ஸ்ரீநிதி ஷெட்டி, மிரினாலினி ரவி என படக்குழுவினர் இணைந்து ஊர் ஊராக சென்று ப்ரோமோஷன் செய்து வந்தனர். சென்ற கோப்ரா திரைப்பட குழுவினர் திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் என கல்லூரி கல்லூரிகளாக சென்றும் ப்ரோமோஷன் செய்தனர். கோப்ரா திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், சியான் விக்ரம் தெலுங்கு ஊடகத்தினரின் கேள்விக்கு அளித்த பதில் தற்போது பேசுபொருளாகி வருகிறது.
பாய்காட்டா அப்டினா..?
தெலுங்கு ஊடகத்தினர் பாய்காட் பாலிவுட் கூற்று குறித்த சர்ச்சை கேள்வி ஒன்றை சியான் விக்ரம் இடம் கேட்க, அதற்கு பதில் அளித்த விக்ரம் மிக சாதுர்யமாக சூழ்நிலையை கையாண்டுள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பின்போது பத்திரிக்கையாளர் ஒருவர் நடப்பில் இருக்கும் பாய்காட் பாலிவுட் ட்ரெண்ட் ஆமீர்கானின் லால் சிங் சத்தா, அக்ஷய் குமாரின் ரக்ஷாபந்தன் போன்ற படங்களின் பாக்ஸ் ஆபிஸில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது பற்றி தங்கள் கருத்து என்ன என்று கேட்டுள்ளார்.
இந்த சர்ச்சைக்குள்ள கேள்வியை தவிர்க்கும் நோக்கில் விக்ரம், நகைச்சுவையாக தனக்கு அந்த கூற்று என்னவென்றே தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் எனக்கு 'பாய்' தெரியும் 'காட்' தெரியும். ஆனால் பாய்காட் என்றால் என்னவென்று தெரியாது என்று கூறியுள்ளார்.
ALSO READ | Cobra Movie First Review: வெளியான கோப்ரா ரிவியூ! விக்ரமுக்கு இது மைல்கல்! புகழ்ந்துதள்ளிய முக்கிய நபர்!
கோப்ரா:
சியான் விக்ரம் நடிப்பில் வெளிவர உள்ள கோப்ரா திரைப்படம் ஒரு ஆக்சன் திரில்லர் திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் 25 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். படக்குழுவில் கேஜிஎப் புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், ரோஷன் மாத்திவ், மிரினாலினி ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பத்தான் அவரது நடிப்பு அறிமுகத்தை இந்த படத்தில் மூலம் தொடங்குகிறார். இர்பான் பத்தான் கோப்ரா திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நாளை வெளியாக இருக்கிறது.
பொன்னியின் செல்வன் :
இதனைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் மணிரத்னம் இயக்கத்தில் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் நாள் வெளிவர உள்ளது. ஆகஸ்ட் இறுதியில் கோப்ரா… செப்டம்பர் இறுதியில் பொன்னியின் செல்வன்… என அடுத்தடுத்து ரிலீஸ்களை வைத்துள்ளார் சியான். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, த்ரிஷா, பிரகாஷ்ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து படத்தின் பிரம்மாண்டத்தை கூட்டியுள்ளது.