Cobra First Review: கோப்ரா படத்தினை வெளிநாட்டில் உள்ள, வெளிநாட்டு தணிக்கை குழு உறுப்பினர் உமர் சந்து என்பவர் படத்தினைப் பார்த்துவிட்டு படம் குறித்து தனது ரிவியூவ்வை தனது சமூக வலைதளமான டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில், கோப்ரா படத்திற்காக நடிகர் விக்ரமிற்கு தேசிய விருது உறுதி எனவும், ஸ்டைலாக, மாஸாக மற்றும் த்ரிலாக படம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் விக்ரமின்(Vikram) சினிமா வாழ்க்கையில் கோப்ரா முக்கியமான மைல் கல் எனவும் தெரிவித்துள்ளார். 






பிரபல நடிகர் விக்ரம்மின் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘கோப்ரா’. படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான்(Irfan Pathan), கே ஜி எஃப் ஹீரோயின், ஸ்ரீநிதி ஷெட்டி, டிக் டாக் மூலம் பிரபலமான மிரினாலினி ரவி(Mirnalini Ravi) ஆகியோர் இடம் பெற்றுள்ளதால் படத்தின் ரிலீஸிற்காக அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். நயன்தாராவை வைத்து ‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியான ‘தும்பி துள்ளள்ளோ’ பாடல் ஏற்கனவே ஹிட் அடித்து பல மில்லியன் வியூஸ்களை கடந்து போய்க்கொண்டிருக்கின்றது. படத்தின் டீசர் ஒரு வருடத்திற்கு முன்னரே வெளியிடப்பட்டு எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்தது. படப்பிடிப்பு முடிந்து பல நாட்களாக ஆன நிலையிலும், படத்தின் ரிலீஸ் டேட் தள்ளிப்போய்க் கொண்டேயிருந்தது. இந்நிலையில், நாளை இந்தியாவில் படம் வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது நாளுக்கு நாள்  மிகவும் அதிகரித்தவண்ணம் உள்ளது. 






இந்நிலையில், நாளை காலை முதல் காட்சி அதிகாலை நான்கு மணிக்கு திரையிடப்படவுள்ள நிலையில், வெளிநாட்டு தணிக்கை குழு உறுப்பினர், உமர் சந்து வெளியிட்டுள்ள கோப்ரா படத்தின் ரிவியூவ் ரசிகர்கள் மத்தியில் இன்னும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. நடிகர் விக்ரம், ஸ்ரீநிதி உள்ளிட்டோர் சமீபத்தில் மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று படத்தின் ‘ப்ரமோஷன்’ நிகழ்ச்சிளில் கலந்து கொண்டனர். எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும், அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்து, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் விக்ரமின் படம் என்பதாலும், நீண்ட நாட்கள் காத்திருப்பிற்கு பிறகு படம் வெளியிடப்படுவதாலும், படத்தின் மேல் ரசிகர்களுக்கு உள்ள எதிர்ப்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது. இந்த எதிர்ப்பார்ப்புகளை, உமர் சந்துவைப் போல் அனைவரையும் கோப்ரா பூர்த்தி செய்யுமா, இல்லையா என்பது படத்தின் ரலீஸிற்கு பிறகு தான் தெரிய வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.