நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் 3ஆம் தேதி ‘விக்ரம்’  திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் பாடல்கள் கடந்த 15ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் இன்று விக்ரம் திரைப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு விழா நடைபெற்றது. அதில் நடிகர் கமல்ஹாசன்(Kamal haasan) மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்(Lokesh Kanagaraj) ஆகியோர் பங்கேற்றனர். 


இதில் நடிகர் கமல்ஹாசன், “நான்கு வருடம் என்னுடைய ரசிகர்களை காத்திருக்க வைத்த தற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். படத்தில் கூட லோகேஷ் இப்படி என்னை வேலை வாங்கவில்லை. அவருக்கு நன்றி சொன்னால் அவர் அந்நிய பட்டு விடுவார். அவர் கோபித்து கொள்வார். மக்களுக்காகவும் பணத்தை முதலீடு செய்ய போகிறேன். நான் 1 ருபாய் சம்பாத்திதால் என்னுடைய ரசிகர் 20 ரூபாய் சம்பாதிக்க வேண்டும் நான் நினைப்பேன். திரையில் கமலை பார்க்க போதும். என்னை விட அவர் நல்லா இருக்கிறாரே என்று தோன்றும். கொஞ்சம் வித்தியாசமாக படத்தை எடுத்திருக்கிறோம். உலக தர சினிமா எடுக்கிறவர்கள் கோப படுவார்கள். திரைக்கதை எழுத ஆரம்பித்த போது, என்னுடைய கதைகளை மெனக்கெட்டு கேட்பார் கலைஞர்” எனப் பேசியுள்ளார்.


ஜூன் 3 கலைஞர் பிறந்தநாள் அன்று விக்ரம் படமும் ரிலீஸ் செய்யப்படுவது திட்டமிட்டதா? எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு கமல்ஹாசன், “அது திட்டமிட்டது இல்லை. இருந்தாலும் ஒரு நல்ல நாளில் படம் வெளியாக இருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் சினிமாவை கற்றுக்கொண்ட முன்னோடிகளில் கலைஞர் முக்கியமானவர்” எனக் கூறினார்.


 






முன்னதாக இன்று விக்ரம் திரைப்படத்தின் போர்க்கொண்ட சிங்கம் பாடலின் வரிகள் கொண்ட வீடியோ வெளியானது. இந்தப் பாடல் வீடியோவை பலரும் பார்த்து ரசித்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண