சத்ய ஜோதி ஃப்லிம்ஸ் மற்றும் நடிகர் ஹிப் ஹாப் தமிழா கூட்டணி மீண்டும்  ‘வீரன்’ என்ற படம் மூலம் இணைந்திருக்கிறது. 


சத்ய ஜோதி ஃப்லிம்ஸ் நிறுவனத்துடன் நடிகர் ஹிப்ஹாப் ஆதி மூன்றாவதாக இணைந்திருக்கும் திரைப்படம் வீரன். முன்னதாக  ‘சிவகுமாரின் சபதம்’  ‘அன்பறிவு’ ஆகிய திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியிருந்த இந்தக்கூட்டணி மீண்டும் இந்தப்படத்தின் மூலம் இணைந்திருக்கிறது. ‘மரகத நாணயம்’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்த ARK சரவணன் இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார்.


 






இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று (மே 25, 2022) காலை பொள்ளாச்சியில் தொடங்கியிருக்கிறது. ஒரே கட்டமாக படத்தை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்ப படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. 


 






ஒரு ஃபேன்டஸி காமெடி ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகியிருக்கும் இந்தத்திரைப்படத்தில் ஆதிரா ராஜ் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளார்கள். ஹிப் ஹாப் தமிழாவே இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.