லோகேஷ் கனகாரஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், கமல்ஹாசன், விஜய்சேதுபதி, ஃபகத் பாஸில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த திரைப்படம் விக்ரம். இந்த படம் கடந்த ஜூன் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து திரையிடும் திரையரங்குகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. படம் வெளியாகி 25 நாள்களை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையிலும் திரையரங்கு நிறைந்த காட்சிகளாகவே உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளாவிலும் இத்திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.


வசூல் அளவிலும் இத்திரைப்படம் வெற்றிகரமாகவே இருப்பதாக திரை விமர்சகர்கள் கூறியுள்ளனர். இத்திரைப்படம் வெளியான 17 நாள்களிலேயே 155 கோடி ரூபாய் வசூலை எட்டியிருப்பதாகவும், பாகுபலி 2 செய்த சாதனையான 152 கோடி ரூபாய் வசூல் சாதனையை 5 ஆண்டுகளுக்குப் பிறகு விக்ரம் முறியடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் இன்னும் 4 முதல் 5 வாரங்களுக்கு திரையரங்குகளில் ஓடும் என்று கூறப்படும் நிலையில் 400 கோடி ரூபாய் வசூலை கடந்து விக்ரம் திரைப்படம் பல ரெக்கார்ட்களை படைத்து வருகிறது. 










இந்தநிலையில், விக்ரம் திரைப்படம் வருகின்ற ஜுலை 8 ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் தனது ட்விட்டர் பக்கத்தில் ’நாயகன் மீண்டும் வரார்’.. என்ற வசனத்துடன் நடிகர் கமல் ஹாசன் நடந்து வரும் வீடியோவுடன் வெளியிட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண