கணவன்-மனைவி ஆகியோருக்கு இடையில் ஏற்படும் சண்டைகள் சில சமயத்தில் விபரீதத்தில் சென்று முடிந்துவிடும். அப்படி ஒரு சம்பவம் தற்போது நடைபெறுள்ளது. தன்னுடைய மனைவியை கணவர் கொலை செய்து விட்டு காணவில்லை என்று நாடகம் ஆடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


டெல்லியின் மைதான்கார்ஹி பகுதியைச் சேர்ந்தவர் சுனில் குமார்(32). இவருக்கு உத்தரபிரதேச மாநிலத்தின் புலந்த்சாஹர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரும் டெல்லியில் வசித்து வந்துள்ளனர். இந்தச் சூழலில் சுனில் குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பாக காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தன்னுடைய மனைவியை 13ஆம் தேதி முதல் காணவில்லை என்று தெரிவித்துள்ளார். 


அவர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு சுனில் குமாரின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்துள்ளது. இதன்காரணமாக அவரை அழைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். தன்னுடைய மனைவி காணமல் போன 10 நாட்களுக்கு பிறகு எப்படி திடீரென்று புகார் அளித்தார் என்ற சந்தேகமும் காவல்துறையினருக்கு எழுந்துள்ளது. 


 


இதைத் தொடர்ந்து சுனில் குமாரிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சுனில் குமார் தன் மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் அவருடைய மனைவியின் சடலம் காட்டிற்குள் ஒரு பகுதியில் இருப்பதாக தெரிவித்தார். அவர் கூறிய தகவலை வைத்து காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுனில் குமாருடன் சேர்ந்து அவருடைய சகோதரர் சோட்டு(27) ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. 


சுனில் குமார் மற்றும் அவருடைய சகோதரர் ஆகிய இருவரின் மீது கொலை குற்றம் தொடர்பான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சுனில் குமார் மீது ஆவணங்களை மறைத்தல், தவறாக காவல்துறையினரை வழிநடத்தியது என்பது தொடர்பாக வழக்குகளை பதிவு செய்துள்ளனர். சுனில் குமார் மீது மனைவியின் குடும்பத்தினர் உத்தரபிரதேசத்தில் புகார் அளித்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சுனில் குமாரை தற்போது கைது கொலைக்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சுனில் குமாரின் சகோதரர் சோட்டுவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மனைவியை கொலை செய்துவிட்டு காணவில்லை என்று கணவர் நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண