விக்ரம் படத்தோட விமர்சனம் என்பது காட்டுத் தீ போல் தற்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட பாதிபேர், சோசியல் மீடியாவிலேயே படத்த பார்த்த ஒரு எண்ணத்தை, விமர்சனம் என்ற பெயரில் கொடுத்துவிடுகிறார்கள். எனவேதான், ஒரு வித்தியாசமான முறையில் ஒரு அன்கட் விமர்சனத்தை தருகிறேன்.
விக்ரம் படத்தோட ஹைலைட், கமலோ, விஜய் சேதுபதியோ, ஃபகத் ஃபாசிலோ இல்லை. படத்தோட ஒட்டுமொத்த க்ரிப்புக்கு காரணம், ஸ்க்ரீன்ப்ளே என்றழைக்கப்படும் திரைக்கதைதான். டைரக்டர் லோகேஷுக்கு முதலில் இதுக்கு ஒரு சபாஷ் கொடுத்திடலாம். ஆனால், படம் கொஞ்சம் நீளம்தான், கொஞ்சம் இழுக்குதன்னு சொல்லும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
விக்ரம் படத்துல, கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சூர்யான்னு நான்கு பேரும் நட்சத்திரங்கள் களமிறங்கியுள்ளனர். எனவே, நடிப்புப் போட்டி நிச்சயம்னு போறவங்க எதிர்பார்ப்பு கொஞ்சமும் வீண் போகாது. சில நிமிடங்கள் வந்தாலும், கெட் அப்பல அசத்தி, விக்ரம் 3-க்கு தயாரா இருங்கன்னு ஸ்கோர் பண்ணிட்டு போராரு சூர்யா. மாஸ்டர் படத்தின் பவானி கதாபாத்திர சாயல் வரக்கூடாதுன்னு விஜய் சேதுபதி நிறைய மெனக்கெட்டு இருக்காரு. இதற்காக, ஸ்பெஷலா ஒரு டிராமா டீச்சர்கிட்ட பாடமெல்லாம் எடுத்துட்டு நடிச்சிருக்காரு விஜய் சேதுபதி. தங்கப் பல்ல காட்டி பயமுறுத்தும் விஜய் சேதுபதிக்கு, இந்தப் படம் நிச்சயம் ஒரு மைல்கல்தான்.
ஃபகத் பாசில்ல பொறுத்தமட்டில், முதல் பாதியே அவர்தான் சொல்லுமளவுக்கு அசத்தி இருக்காரு. சபாஷ் ஃபாசில். கமலுக்கு வருவோம்… முதல்ல என்ட்ரி கொடுத்துட்டு காணாமல்போகும் கமல், மீண்டும் வருவதில் இருந்து, படம் ரேஸ் கார் வேகத்துக்கு போகுது. ஆனால், நாயகன், மகாநதி போல் கமல்கிட்ட நடிப்ப எதிர்பார்த்தா, அந்த அளவுக்கு இந்தக் கதையில வாய்ப்பு இல்லை.. ஆனா, இந்த வயசுலேயேும் ஆக்ஷனுக்கு குறைவு வைக்கல உலகநாயகன. மொத்தத்துல்ல படத்துல நடிப்புன்னு பார்த்தா, நாலு பேரும் அவங்கவங்க பாத்திரத்திற்கு ஏற்ப ஸ்கோர் செஞ்சு, நூற்றுக்கு நூறு வாங்கராங்க.
ஒளிப்பதிவு, இசை, நடனம், சண்டை என படத்தின் அனைத்து அம்சங்களும் கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பா செஞ்சிருக்காங்க.. ஆனால், கைதியில ஸ்கூல் படிச்சு, மாஸ்டர்ல கல்லூரிக்கு போயி, விக்ரம்ல பிஎச்டி பண்ற அளவுக்கு, போதைப்பொருள் நடமாட்டத்தையும், அதனால் வரும் பிரச்சினைகளையும் ரசிகர்களுக்குப் பிடிக்கிற மாதிரி டீல் பண்ணியிருக்காரு டைரக்டர் லோகேஷ் கனகராஜ்.
கமல், விஜய்சேதுபதி, ஃபகத் பாசில், சூர்யான்னு 4 பெரிய நட்சத்திரங்களை வைத்து படம் எடுப்பது சாதாரண காரியமல்ல. நால்வருக்கும் ஏற்ப, அவரவர் பாணியிலே சிறப்பாக செய்ய வைச்சு, சிறப்பா செஞ்சிருக்காரு டைரக்டர். அந்தக்கால விக்ரமுக்கு, இன்றைய விக்ரமுக்கு நிறைய வித்தியாசம், ஒரே ஒரு ஒற்றுமை என்னவென்றால், ரெண்டுமே நாட்டுக்காக செய்யப்படுகின்ற நன்மைதான் மெசேஜ்.
நிச்சயம் தியேட்டர்ல மட்டுமே இந்தப்படத்த பார்க்கணும்.. அப்பத்தான் அந்தப்படத்தோட அதிரடி வேகம், நம்மல கட்டிப் போடும். ஆரம்பிக்கலாமா என கமல் பேசும் வசனம் படத்தோட வேகத்த மட்டுமல்ல, ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் அதிகரிக்கிறது. ஆக மொத்தத்தில் இது கமல் படமோ, விஜய் சேதுபதி படமோ, ஃபகத் பாசில் படமோ அல்ல. முழுக்க. முழுக்க டைரக்டர் லோகேஷ் கனகராஜின் படம்னு சொல்றதுன்னா கரெக்ட். படத்தோட முடிவு எப்படின்னு கேள்வி வரும்.. அதற்குப் பதில் ஜெயிச்சிட்டாரு என்பது மட்டும்தான்!!!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்