இரு சக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்தது. அதனை தொடர்ந்து பல அதிரடி முன்னெடுப்புகளை எடுத்து வருவதை காண முடிகிறது. தற்போது அதன் ட்விட்டர் பக்கத்தில் பொதுமக்கள் புகைப்படம் எடுத்து வெளியிடும் சாலை விதி மீறல்களுக்கு அபராதம் விதித்து அங்கேயே பில்லையும் பதிவிட்டு வருவதை காண முடிகிறது. 


பின்னிருக்கை ஹெல்மட்


இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமர்பவர்களும் ஹெல்மட் அணிவது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சிறப்பு வாகன தணிக்கைகளை நடத்தி வாகன விதி மீறுபவர்களை கண்காணித்தும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதை மேம்படுத்துவதற்காகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மற்றும் ஹெல்மெட் அணியாத பின் இருக்கை நபரின் மீது வழக்குப் பதிவு செய்தும் வருகின்றனர்.










விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும், 23.05.2022 திங்கட்கிழமை முதல் சென்னை பெருநகர காவல்துறை இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கை நபரும் ஹெல்மெட் விதிகளைக் கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கான சிறப்பு வாகன தணிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கை நபர் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்." என்று குறிப்பிட்டிருந்தனர்.


ஆட்டோக்களின் பின்னால் வாசகங்கள்


கடந்த சில நாட்களில், சென்னையில் பல ஆட்டோக்களின் நாம் கவனித்திருக்கக்கூடும், மது அருந்தி வாகனம் ஓட்டுவது, வேகமாக ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டே ஓட்டுவது, போன்றவற்றை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இதுபோன்ற புதிய முயற்சிகளை சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எடுத்து வருகிறது.






தானியங்கி கேமரா


சில மாதங்கள் முன்பு தானியங்கி கேமராக்கள் மூலம் சாலை விதி மீறுபவர்களுக்கு அபராதம் நேரடியாக ஆன்லைன் மூலமாக விதிக்கப்படும் புதிய திட்டம் சில இடங்களில் செயல்படுத்தப்பட்டது. தற்போது அதன் வேறு வடிவமாக மக்களே புகைப்படம் எடுத்து அனுப்பினால் அதில் உள்ள நம்பரை பார்த்து பைன் போடும் வழக்கம் உருவாகி உள்ளது.






ட்விட்டர் அபராதம்


சாலையில் யாராவது விதிகளை மீறினால் பொதுமக்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டால், அதனைக் கண்டு அதில் உள்ள நம்பரை பயன்படுத்தி அபராதம் போடுகிறார்கள் காவல்துறையினர். அபராதம் போட்ட பில்லையும் சில பதிவுகளின் கீழ் கமென்டில் பதிவிட்டு வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.