தமிழ் திரையுலகிற்கு மாநகரம் என்ற எதார்த்த திரைக்களத்துடன் கால் பதித்தவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் ’கைதி’ என்ற படத்தில் நடித்தார். இந்த படமும் ஹிட் அடிக்கவே. விஜயை வைத்து , ‘மாஸ்டர்’ படத்தை இயக்கினார். படம் விஜய் ரசிகர்களுக்கு மாபெரும் ட்ரீட்டாக அமைந்தது. வட்டார வழக்கில் ‘நடிப்பில் பிண்ணில் பெடலெடுப்பாங்க’ என்று கூறுவது போல நடிப்பு சாணக்கியர்களாக விளங்கும் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்ளிட்ட நடிகர்களை ஒரே ஃபிரேமுக்குள் கொண்டுவரும் முயற்சியை கையில் எடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு விக்ரம்(Vikram) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி , இந்திய திரையுலகையே அதிர செய்தது. விக்ரம் படத்தை கமல்ஹாசனுக்கு சொந்தமான , ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரித்து வருகிறது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இன்று (அக்டோபர் 3) இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இது குறித்த அறிவிப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் வெளியுட்டுள்ள புகைப்படத்தில் கமல்ஹாசன் பைக்கில் அமர்ந்தபடி கெத்தாக போஸ் கொடுத்துள்ளார்.ரசிகர்கள் , சகலகலா வல்லவன் படத்தின் கமலை நினைவுகூற வாய்ப்பிருக்கிறது. கூடவே சண்டைப்பயிற்சி இயக்குநர்கள் அன்பறிவு மாஸ்டர்ஸ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். சண்டைப்பயிற்சி இயக்குநர்கள் புகைப்படத்தில் இருப்பதன் மூலம் , கமல்ஹாசனின் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவது தெரிகிறது. லோகேஷ் கனகராஜ் அவ்வபோது விக்ரம் படம் குறித்தான அப்டேட்டை டிவிட்டர் வாயிலாக தனது ரசிகர்களுக்கு தெரிவித்து வருகிறார், முன்னதாக ஃபஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதியுடன் முதற்கட்ட படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து “பேரின்பம் “ என குறிப்பிட்டிருந்தார்.
நரேன் விக்ரம் படத்தில் இணைந்ததை வெளியிட்டு வரவேற்றிருந்தார்.
#62YearsOfKamalism கொண்டாட்டத்தின் பொழுது , “சிங்கம் எப்போதுமே சிங்கம்தான் “ என்ற ஆங்கில கேப்ஷனுடன் விக்ரம் படத்தின் கமல்ஹாசன் போஸ்டரை வெளியிட்டிருந்தார்.