ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றிபெற்ற பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகும் இந்த படத்தை ராக்ஃபோர்ட் எண்டர்டைன்மெண்ட் தயாரித்து வருகிறது. கார்த்திக் ராஜா பிசாசு 2 படத்திற்கு இசையமைக்கிறார். படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் ஆண்ட்ரியா லீட் ரோலில் நடிக்க, பேய் ஓட்டும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி குறித்து இயக்குநர் மிஷ்கின் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். விஜய் சேதுபதி நடிக்க வந்த ஆரம்ப காலக்கட்டத்தில் ,‘நந்தலாலா’ படத்திற்காக மிஷ்கினை அணுகியுள்ளார். அப்போது மிஷ்கின் சிறு கதாபாத்திரம் ஒன்றை கொடுத்து விஜய் சேதுபதிக்கு கொடுத்து நடித்துக்காட்ட சொன்னாராம். ஆனால் விஜய் சேதுபதியின் நடிப்பு மிஸ்கினுக்கு பிடிக்காமல் போனதால், ”போடா” என அனுப்பிவிட்டாராம். அதனால் விஜய் சேதுபதிக்கு மிஷ்கின் மீது கோபம் இருந்திருக்கிறது.




அந்த கோபம் கிட்டத்தட்ட 15 வருடங்கள் மிஷ்கின் மீது இருந்ததாம். சமீபத்தில் மிஷ்கின்  உதவி இயக்குநர் விஜய் சேதுபதியை அணுகியபோது, மிஸ்கினுடனான மனக்கசப்பை பகிர்ந்துள்ளார். அந்த கோபம் நியாயமான கோபம்தான், “ஒரு கவிஞனின் கோபம் தேனியின் விஷம்  போன்றது“ அதுபோல அது ஒரு குழந்தைத்தனமான கோபம்தான் என்ற மிஷ்கின். திடீரென ஒருநாள் அலுவலகம் வந்த விஜய் சேதுபதி மிஷ்கினை கட்டியணைத்து, தனக்கிருந்த கோபத்தை விளக்கினாராம். அத்துடன் இருவருக்குமான மனக்கசப்பு நீங்கியதாக தெரிவிக்கிறார் மிஷ்கின். பின்னர் ஒரு நாள் மிஷ்கினை தொலைபேசியில் அழைத்து, இரண்டு நாட்கள் உங்கள் படத்தில் நடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தாராம் விஜய் சேதுபதி. அதற்காக உருவாக்கப்பட்டதுதானாம் பிசாசு படத்தில், விஜய் சேதுபதியின் கதாபாத்திரம். விஜய் சேதுபதி சினிமாவை அனுகும் முறையை கண்டு வியக்கிறார் மிஷ்கின். தன் மீது கொண்ட நம்பிக்கை காரணமாகத்தான் , ஹீரோவாகவும் , வில்லனாகவும் ஒரே நேரத்தில் விஜய் சேதுபதியால் நடிக்க முடிகிறது என்கிறார் மிஷ்கின்.பிசாசு 2 படத்தில் விஜய் சேதுபதிக்கு சிறு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டாலும் , 16 நிமிடங்கள் வந்து , வேற லெவலில் அசத்தியிருக்கிறாராம் விஜய் சேதுபதி.




அதேபோல ஆண்ட்ரியா படத்தில் சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். சித்திரம் பேசுதடி படத்திற்கு பிறகு பெண்ணிற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம் பிசாசு 2 என்கிறார் இயக்குநர் மிஸ்கின்.படத்தில் ஆண்ட்ரியாவின் சிறுவயது கதாபாத்திரத்திற்கான ரெஃபரன்ஸை ஆண்ட்ரியாவின் பாட்டி புகைப்படத்தில் இருந்து எடுத்திருந்தாராம் . படத்தின் இசையமைப்பாளர் படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கும் என தெரிவித்த மிஸ்கின், பிசாசு 2 படம் மக்கள் மனதில் நிச்சயம் இடம்பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.