நடிகர் கமல்ஹாசன் , விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம்தான் ‘விக்ரம்’. இந்த படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  மாநகரம், கைதி, மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு ‘விக்ரம்’ படத்தை கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். விக்ரம் டத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி , இந்திய திரையுலகையே அதிர செய்த நிலையில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை அவ்வபோது பகிர்ந்து வருகிறார் இயக்குநர்.










சமீபத்தில் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு  வெளியான கிளிம்ஸ் வீடியோவுன் ட்விட்டர் ட்ரெண்டில் இடம்பிடித்தது. அதில் கமல் துப்பாக்கியை கிட்டார் போல பிடித்திருந்த மாஸான புகைப்படம் இடம்பிடித்திருந்தது.





இந்நிலையில் விக்ரம் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கோவையில் படமாக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நாளை (நவம்பர் 17, புதன்கிழமை) படத்தின் முக்கிய ஸ்டார்ஸான கமல்ஹாசன் , ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி ஆகிய மூவரும் இடம்பெறும் காட்சிகளை படமாக்கவுள்ளாராம் இயக்குநர். முன்னதாக சென்னை போலிஸ் அருங்காட்சியகத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு விதித்துள்ள நடைமுறை அறிவிப்புகளை சுட்டிக்காட்டி ஷூட்டிங் அனுமதியை போஸிசார் மறுத்துவிட்டனர். இதனால் படப்பிடிப்பை தள்ளி வைத்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.


ஒரு சில நாட்கள் முன்னதாக தொடங்கியிருக்க வேண்டிய படப்பிடிப்புகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நாளை மீண்டும் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. விக்ரம் படத்தை வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடித்து , அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரையிட வேண்டும் என படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே அடுத்தடுத்த வேலைகளை முடுக்கிவிட்டுள்ளாராம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.