Vikram 100 days of roaring success celebration : நெருங்க முடியாத மகத்தான வெற்றி... விக்ரம் கொண்டாட்டம்... ரசிகர்கள் ஆரவாரம்

  


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் நடிப்பில் உலகளவில் கிழி கிழி என கிழித்து எடுத்த படம் "விக்ரம்". இதுவரையில் தமிழ் சினிமா வரலாற்றில் அதிகப்படியான வசூலை ஈட்டிய திரைப்படமாக திகழ்கிறது "விக்ரம்" திரைப்படம். மகத்தான வெற்றிபெற்ற இப்படத்தின் 100 நாள் கொண்டாட்டமாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர் பட குழுவினர். விக்ரம் படத்தின் ரோரிங் சக்சஸ் என்ற ஹாஷ்டேக்கொடு மிகவும் வைரலாகி வருகிறது. இது தற்போது லைக்ஸ்களை குவித்து வருகிறது. 



செதுக்கப்பட்ட கதாபாத்திரங்கள் படத்தின் வெற்றி :


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ்கமல் நிறுவனத்தின் சார்பாக கமல்ஹாசன் தயாரித்து நடித்த இப்படத்தில் விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், மாயா, பகத் பாசில், காயத்ரி, ஷிவானி, செம்பன் வினோத் என ஒரு பெரிய திரை பட்டாளமே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் நடிகர் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்த ஏஜென்ட் டீனாவின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக எதிர்பாராத நேரத்தில் அவரின் ஆக்ஷன் காட்சி பட்டையை கிளப்பியது என்றே சொல்லலாம். கிளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே நடிகர் சூர்யா நடித்திருந்தாலும் கனகச்சிதமாக ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் பொருந்தி இருந்தார். அவரின் நடிப்பு கைதட்டல் பெற்றது. விக்ரம் படத்தில் நடித்திருந்த ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் சிறப்பான தேர்வுகள். படத்திற்கு பெரும் பக்கபலமாய் அமைந்தது படத்தின் பின்னணி இசை. இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் சும்மா தெறிக்கவிட்டு இருக்கிறார். கமல்ஹாசன் காட்சிகள் வரும் போதெல்லாம் அரங்கமே அதிர்கிறது. 






மகத்தான வெற்றி படம் :


உலகளவில் சுமார் 5000 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இப்படம் வரலாறு காணாத மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றி கூட்டணி மீண்டும் பல வெற்றி படங்களை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.