‘விக்ரம்’


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படம் இன்று அதிகாலை வெளியானது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசனின் ஆக்‌ஷன் படம் வெளியாவதால் மொத்த தென்னிந்திய திரையுலகமே மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தது. அத்துடன் கமல்ஹாசனின் தீவிர ரசிகர்கள் அதிகாலை முதலே சிறப்பான கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தியேட்டர் முன்பு ரசிகர்கள் கூடி ஒரே ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சியுடன் படத்தை வரவேற்க தயாராக இருந்தனர்.


சென்னையில் உள்ள ரோகினி, வெற்றி ஆகிய தியேட்டர்களில் அதிகாலை 2 மணி முதலே ரசிகர்கள் கட் அவுட்களை வைத்து, பட்டாசுகளை வைத்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். நெல்லையில் உள்ள பிரபல தியேட்டரான ராம்  சினிமாஸிலும் இதேபோல் கொண்டாட்டம் இருந்தன. கமலின் ரசிகர்கள் தவிர, விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சூர்யா ரசிகர்களும் அவருக்கு கட் அவுட்களை வைத்து படத்தை காண மிகுந்த் ஆர்வத்துடன் வந்திருந்தனர். ரசிகர்களின் கொண்டாட்ட நிகழ்வுகளை கீழே காணலாம். 


ரோகிணி தியேட்டர் கொண்டாட்டம்:


 






 


ராம் சினிமாஸ்


 










 


புதுச்சேரி


 






 


கேரளா - திருச்சூர்


 






 






கர்நாடகா, பெங்களூரு


 






 


சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்






கோவில்பட்டி ரசிகர்கள்


 






 


ரசிகர்களுடன் படம் பார்த்த லோகேஷ் கனகராஜ், அனிருத்






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண