கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் டீஸர், மேக்கிங் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதி படத்தின் ஆடியோ நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் டிரெய்லரும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ட்ரெண்டிங்கிலும் முதலிடம் பிடித்தது.தற்போது நடிகர் கமல்ஹாசன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் அங்கு அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், 1986ஆம் ஆண்டு வெளிவந்த விக்ரம் திரைப்படத்திற்கும் இந்த விக்ரம் திரைப்படத்திற்கு சம்பந்தம் இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்துள்ளார்.
அதில், “1986ஆம் ஆண்டு வெளிவந்த விக்ரம் திரைப்படத்திற்கும் இந்த திரைப்படத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அந்தப் படத்தின் கதையை நான் எழுதினேன். அதில் சில குறைபாடுகள் இருந்ததாக சில விமர்சனங்கள் வந்தன. அதனால் லோகேஷ் கனகராஜ் வந்து என்னிடம் கதைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது இந்தப் படத்தை விக்ரம் படத்தை தழுவி இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன்.
அதற்கு அவர் தன்னுடைய பாணியில் ஒரு புது கதையை எழுதி வந்தார். அந்தக் கதை எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் பார்த்து தான் சொல்ல வேண்டும். இந்தப் படம் பிரபல இயக்குநர் குவிண்டின் டாரெண்டினோ படத்தை போல் இருக்கும் என்று நான் கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:அப்படிபோடு... கமலே சொல்லிட்டாரு....விக்ரம் குறித்து கமல் கொடுத்த புது அப்டேட்...!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்