மனித உரிமைகளுக்காகப் பணியாற்றும் இந்திய அமைப்பான ஜனநாயகம், பன்மைத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்கான மையம் (CDPHR) சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.


அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் சில விதிகள் இனவெறி கொண்டவை என்று அந்த அறிக்கை கூறுகிறது. அரசமைப்புச் சட்டத்தின் ஐந்தாவது பிரிவு சமத்துவக் கொள்கையை மீறுவதாகக் கூறப்படுகிறது. Fugitive Slave Clause, மக்களை அடிமைத்தனத்திலிருந்து தப்பிக்க அனுமதிக்கக் கூடாது என்று கூறுகிறது. அமெரிக்க அரசியலமைப்பின் 4வது திருத்தத்தின் பிரிவு 3, அடிமைகளைப் பிடிக்க அங்கீகாரம் அளிக்கிறது என்று கூறுகிறது. இந்த அடிமைத்தனத்தை ஆதரிக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் பகுதிகள் இன்னும் அகற்றப்படவில்லை என்றும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.


மேலும், கலிபோர்னியா மற்றும் நியூயார்க் மாநிலங்களின் அரசியலமைப்பு சட்டங்களிலும் இனவெறி விதிகள் உள்ளன. இந்த சட்டங்களில் 'இந்தியர்களுக்கு வீடு மற்றும் உரிமைகள்' மறுப்பதும் அடங்கும். இந்துத்துவத்தை எதிர்ப்பதற்கு தயாராக இருக்கும் இந்தியர்களுக்குதான் அங்கு வீடு வாங்கும் உரிமைகள் கொடுக்கப்படுகிறதாம். உலகின் பழமையான ஜனநாயகம் என்று அமெரிக்கா கூறிக்கொள்கிறது. இருப்பினும், CDPHR அறிக்கையின்படி, சட்டம் மற்றும் நீதியை நிர்வகிப்பதற்கு பொறுப்பான அமெரிக்காவின் நீதிமன்றங்கள் இனவெறியின் கோட்டையாக இருக்கின்றன என்பதை தோலுரித்து காட்டியுள்ளது இந்த அறிக்கை.


குறிப்பாக, 1994ல் அமெரிக்காவில் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி குற்றங்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், கருப்பின மக்கள் வெள்ளையர்களை விட கடுமையாக தண்டிக்கப்படுகிறார்கள். அங்குள்ள நீதித்துறையின் அமைப்பு இனவாத இயல்புடையது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. பெரும்பாலான உயர் பதவிகள் வெள்ளையர்களால் மட்டுமே நிரப்பப்படுகின்றன. எழுத்தர் பதவிகளும் கருப்பினர்களுக்கு எளிதில் வழங்கப்படுவதில்லை.



மேலும், அமெரிக்காவில் உள்ள அரசியல் கட்சிகளில் இனவெறி நிறுவனமயமாக்கப்பட்டதாக இந்த அறிக்கை கூறுகிறது. பல சமயங்களில் தலைவர்கள் பலர் இனவாதக் கருத்துக்களை கூறுகின்றனர். கல்வி நிறுவனங்களில் கருப்பின மக்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன. அமெரிக்காவில் உள்ள சர்ச்களிலும் இதே நிலைதான், சர்ச் பாதிரியார் கருப்பினராக இருந்தாலும், சர்ச் நடத்துபவர் வெள்ளையர்தான்.


அமெரிக்காவில் கறுப்பின மக்களைக் குறைக்க எவ்வளவு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது என்பதையும் CDPHR தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அறிக்கையின்படி, அமெரிக்காவில் உள்ள பேரன்ட்ஹுட் என்ற வெள்ளை அமெரிக்கர்களின் கட்டுப்பாட்டில் உள்ள என்ஜிஓ, அமெரிக்காவில் கருப்பின மக்களை கொண்டு வந்து கருக்கலைப்பு செய்வதன் மூலம் அமெரிக்காவில் கருப்பின மக்களின் எண்ணிக்கையை குறைக்கின்றனர். அமெரிக்காவில் கருப்பினப் பெண்களில் கருக்கலைப்பு விகிதம் அதிகமாக உள்ளதை இது சுட்டிக்காட்டுகிறது. 


மத சுதந்திரம் குறித்த அறிவை உலகுக்கு வழங்கும் அமெரிக்கா, மத சுதந்திரத்தை மீறுவதாக CDPHR அறிக்கை கூறுகிறது. மத சிறுபான்மையினர், குறிப்பாக கிறிஸ்தவர் அல்லாத மதத்தினர், இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் மற்றும் ஜைனர்கள் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். இந்துக்களும் பௌத்தர்களும் அங்கு வழிபாட்டுத் தலங்களைக் கட்ட மறுப்பதை மண்டலச் சட்டங்கள் தடுக்கின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பைபிளின் அற்புதங்களை வரலாற்றின் ஒரு பகுதியாக கற்பிக்கின்றனர்.



அமெரிக்காவில் உள்ள பூர்வீக இந்தியர்கள் ஒடுக்கப்பட்டு வறுமையில் தள்ளப்பட்டனர். இதனால் 68% இந்தியர்களின் ஆண்டு வருமானம் அமெரிக்காவின் சராசரி வருமானத்தை விட குறைவாக உள்ளது. 20% இந்தியர்களின் ஆண்டு வருமானம் $5,000 மட்டுமே. பூர்வீக அமெரிக்க இந்தியர்கள் மீதான அட்டூழியங்கள் என்ற அத்தியாயத்தில், இந்தியப் பெண்களின் பாலியல் தாக்குதல் விகிதம் சராசரி அமெரிக்க பாலியல் தாக்குதல் விகிதத்தை விட இரண்டரை மடங்கு அதிகம்.


அதிகாரத்தில் இருப்பவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது மிகுந்த கவலை அளிக்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு 5 அமெரிக்கப் பெண்களில் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவோ அல்லது பாலியல் தாக்குதலுக்கு முயற்சிக்கப் பட்டதாகவோ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. நாட்டின் ஜனாதிபதிகள் உட்பட பெரிய அரசியல் பெயர்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதாக அது கூறுகிறது. அந்த அறிக்கையின்படி, அமெரிக்க ஊடகங்கள் மற்றும் பெண்களை அரசு கேவலமாக பார்க்கிறது. பெண்களும் பெண்ணிய அமைப்புகளும் ஆண்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அறிக்கையின்படி.. 2014 ஆம் ஆண்டு வரை, அமெரிக்காவில் 42 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களில் பாதி பேர் தங்கள் துணை அல்லது தெரிந்தவர்களால் பாதிக்கப்பட்டதாக கூறினர்.


கொரோனா நோயால் ஏற்பட்ட இறப்பால் கறுப்பர்களும் ஹிஸ்பானியர்களும் சமமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கறுப்பர்கள், ஹிஸ்பானியர்கள், பூர்வீக ஹவாய் மற்றும் பசிபிக் தீவுவாசிகள் மத்தியில் COVID இறப்புகள் அதிகம். மக்கள்தொகையில் ஹிஸ்பானியர்கள் 18 சதவிகிதம், கோவிட் இறப்புகள் 24 சதவிகிதம் ஆகும். மக்கள் தொகையில் கறுப்பர்கள் 13 சதவீதமாக இருந்தாலும், இறப்பு எண்ணிக்கை 14 சதவீதமாக உள்ளது. 


அமெரிக்காவில் மனித உரிமைகளை அமெரிக்க அரசுகள் மீறுவது மட்டுமின்றி, உலகம் முழுவதும் மனித உரிமை மீறல்கள் வெளிப்படையாகவே காணப்படுகின்றன என்று அந்த அறிக்கை கூறுகிறது. CDPHR இன் படி, ஈராக் போரினால் 90 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். சிரியாவில் 70 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீடற்றவர்களாகவும், ஆப்கானிஸ்தான், சோமாலியா மற்றும் யேமனில் 40 மில்லியனுக்கும் அதிகமானோர் அமெரிக்கா காரணமாகவும் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கை தகவல்கள் வெளியிட்டுள்ளது.