விக்ரம் படத்தின் மூன்றாம் பாகம் உருவாக இருப்பதாக கேன்ஸ் திரைப்பட விழாவில் இருக்கும் கமல்ஹாசன் உறுதிப்படுத்தியுள்ளார்.


கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் டீஸர், மேக்கிங் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதி படத்தின் ஆடியோ நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் டிரெய்லரும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ட்ரெண்டிங்கிலும் முதலிடம் பிடித்தது.


டிரெய்லர் வெளியானபோதே, படத்தில் சூர்யா நடித்துள்ளதாக ரசிகர்கள் கணித்தனர்.  'விக்ரம்' படத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றும், அவர் க்ளைமாக்ஸில் ஒரு கேமியோ வேடத்தில் காணப்படுவார் என்றும் செய்திகள் பரவின. அந்த செய்தியை நிஜமாக்குவதுபோல, அந்த நிகழ்ச்சிலேயே படத்தின் இயக்குநர் லோகேஷ் சூர்யா நடித்திருப்பதை உறுதி செய்தார்.


இந்த நிலையில், விக்ரம் படத்தின் மூன்றாம் உருவாக இருப்பதாகவும், அதற்கான காரணமாக சூர்யா இருப்பார் என்றும் கமல்ஹாசன் கூறினார். கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டுள்ள நடிகர் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் விக்ரம் படம் நான்கு பாகங்களாக உருவாக இருப்பதாக தகவல் வந்தது என பேட்டி எடுப்பவர் கேட்டார். அதற்கு கமல்,  “நான்கு பாகங்கள் உருவாகவில்லை, ஆனால், விக்ரம் படத்தில் கடைசி நிமிடத்தில் சூர்யா வருவார். இது கதையை மூன்றாம் பாகத்துக்கு கொண்டு செல்லும்” என்றும் பதில் அளித்தார். விக்ரம் மூன்றாம் பாகத்தில் சூர்யா நடிப்பாரா என்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. கமலின் இந்த பதில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. விக்ரம் சூட்டிங் ஸ்பாட்டில் சூர்யாவுடன் பிற நடிகர்கள் எடுத்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 






விக்ரம் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை முதல்வரின் மகனும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியிருக்கிறது. இந்த படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியது. அதன்படி, ஓடிடி உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது. சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளது. விக்ரம் படத்தின் ப்ரோமோஷனை பிரம்மாண்டமாக செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்களாம். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண