சிங்கப்பூரில் இதுவரை வெளியான தமிழ் படங்களில் அதிக வசூலை வாரிக் குவித்து விக்ரம் படம் வசூல் சாதனை படைத்துள்ளது.


திரையரங்கு நிறைந்த காட்சிகள்


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், ஃபஹத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் ஜூன் 3ஆம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம்.




இந்தப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, பல இடங்களிலும் திரையரங்கு நிறைந்த காட்சிகளாக இன்றளவும் ஓடி வசூலை வாரிக் குவித்து வருகிறது.


நேற்றைய நிலவரப்படி இப்படம் தமிழ்நாட்டில் 170 கோடி, கேரளாவில் 38.75 கோடி, ஆந்திரா, தெலங்கானாவில் 36 கோடி, கர்நாடகாவில் 24.2 கோடி, மற்ற மாநிலங்களில் 16.25 கோடி என இந்தியாவில் மட்டும் 287.2 கோடி ரூபாய் வசூலையும், உலகம் முழுவதும் 400 கோடிகளையும் வசூலித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


சிங்கப்பூரில் சாதனை


இந்நிலையில், இப்படம் தமிழ்நாடு, இந்தியா தாண்டி அதிக தமிழ் சினிமா ரசிகர்களைக் கொண்டிருக்கும் சிங்கப்பூரில் 1.2 மில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


 






முன்னதாக விக்ரம் படத்தின்  பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து கடந்த வாரம் இயக்குநர் லோகேஷூக்கு காரும், துணை இயக்குநர்களுக்கு பைக்கும், நடிகர் சூர்யாவுக்கு தான் அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்சும் பரிசளித்து ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார் கமல்ஹாசன்


கமல்ஹாசனின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழ்நாடு தாண்டி பல இடங்களிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 




சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு அரசியலில் இருந்து சினிமாவுக்குத் திரும்பியுள்ள கமல்ஹாசனின் இந்தப்படம், கோலிவுட்டில் சமீபத்தில் வெளியான மாஸ் ஹீரோக்களின் படங்கள் எதுவும் செய்யாத சாதனையை நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Lokesh Kanagaraj: கைதி 'டில்லி'யும்.. விக்ரம் 'அமர்'ரும்.. பஹத்துக்கு தனிக்கதை! நச் ப்ளானில் லோகேஷ்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண