Lokesh Kanagaraj: கைதி 'டில்லி'யும்.. விக்ரம் 'அமர்'ரும்.. பஹத்துக்கு தனிக்கதை! நச் ப்ளானில் லோகேஷ்!

தனக்கென சினிமா யுனிவர்ஸை லோகேஷ் உருவாக்கி வருவதாகவும், விக்ரம் கைதி படத்தின் தொடர்ச்சியாகவே அடுத்தடுத்து படங்கள் இருக்குமென்றும் கூறப்படுகிறது.

Continues below advertisement

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த 3 ஆம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். இந்தப்படம் மக்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில், அந்தப்படத்தின் தயாரிப்பாளருமாகவும் இருந்த கமல், லோகேஷூக்கு லெக்சஸ் கார் ஒன்றையும் பரிசளித்தார். இந்தப்படத்திற்கு அடுத்தபடியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்க இருக்கும் படத்தை இயக்குகிறார் என்ற தகவல் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. வழக்கமாக இயக்குநர்கள் அடுத்தடுத்து திரைப்படங்களை வெவ்வேறு கதைக்களங்களில் இயக்குவார்கள். அந்த முறையில் ஒரு சின்னமாற்றத்தைக் கொண்டு வந்து புது ட்ராக்கை பிடித்துள்ளார் லோகேஷ். 

Continues below advertisement

தனக்கென சினிமா யுனிவர்ஸை லோகேஷ் உருவாக்கி வருவதாகவும், விக்ரம் கைதி படத்தின் தொடர்ச்சியாகவே அடுத்தடுத்து படங்கள் இருக்குமென்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் படம் தொடர்பான தகவல்கள் ஒருபக்கம் போனாலும், விக்ரம் படத்தின் கதாபாத்திரங்கள் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கைதி படத்தின் டில்லியும்,விக்ரம் படத்தின் பஹத் ஏற்று நடித்த அமரும் இணையும் விதமாக ஒரு கதையை லோகேஷ் வைத்திருப்பதாகவும், அதன்படி அமருக்கென தனி கதையை லோகேஷ் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

விக்ரம், கைதி பட கேரக்டர்களின் வலைப்பின்னலாக அடுத்தடுத்தடுத்த கதைகளை தன்னுடைய யுனிவஸுக்காக லோகேஷ் தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது. விஜய் படத்தைப் பொறுத்தவரை, “தளபதி 67 என்று அழைக்கப்படும் இந்தப்படத்தில் நடிகர் விஜய் 40 களில் வரும் கேங்ஸ்டர் வேடத்தில் வருவார் எனக் கூறப்படுகிறது. ஃப்ளாஷ் பேக்கில் வரும் காட்சிகளில் இளவயது விஜயை பார்க்கலாம் என்று சொல்லப்படுகிறது. 

பெரும்பான்மையான காட்சிகள் 40 களில் நடப்பது போலத்தான் காட்சிப்படுத்த பட இருக்கிறது. அதே போல விஜய் இந்தப்படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் பாட்ஷா படத்தில் ரஜினி வருவது போல வர இருக்கிறாராம். விஜயும் அவரின் இன்னொரு பக்கத்தை இந்தப்படத்தில் பார்க்க ஆவலாக இருப்பதாக கூறப்படுகிறது

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola