நடிகர் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான  ‘விக்ரம்’ திரைப்படம் உலக அளவில் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை ரூ.5 கோடியை தாண்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


இது குறித்து திரைத்துறை ஆர்வலர் ஸ்ரீதர் பிள்ளை தனது ட்விட்டர் பக்கத்தில், “ விக்ரம் திரைப்படம் உலக அளவில் 150 கோடியும். இந்திய அளவில் 100 கோடிக்கு மேலும் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்றிற்கு பிறகு மிகப் பெரிய வெற்றியை பெற்ற படங்களின் பட்டியலில்  விக்ரம்  திரைப்படம் இணைந்திருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் விக்ரம் திரைப்படம் தலைநகரான சென்னையில் மட்டும் ரூ.5 கோடியை தாண்டிவிட்டதாகவும், இதே வேகத்தில் சென்றால் நிச்சயம் சென்னையில் மட்டுமே 15 கோடியைத் தாண்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.






முன்னதாக, நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பஹத்பாசில் மற்றும் சிறப்புத் தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த 3-ந் தேதி வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்ததையடுத்து படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது. இந்த படம் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.






அண்மை நிலவரப்படி, விக்ரம் திரைப்படம் அமெரிக்காவில் ரூபாய் 13.43 கோடியையும், இங்கிலாந்தில் ரூபாய் 3.90 கோடியையும், ஆஸ்திரேலியாவில் ரூபாய் 3.55 கோடியையும், நியூசிலாந்தில் ரூபாய் 33.91 லட்சத்தையும் வசூல் செய்ததாக தகவல் வெளியானது.  இந்தியில் விக்ரம் திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. கடந்த 3 நாட்களில்  ‘விக்ரம்’ திரைப்படம் இந்தியில் 2 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இந்த வசூலானது அண்மையில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்ற ஆர்.ஆர்.ஆர் மற்றும் கே.ஜி.எஃப் 2 படங்களின் வசூலை விட குறைவாகும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண