அமரர் கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை தழுவி அதே பெயரில் படமாக்கிய இயக்குனர் மணிரத்னம் கோலிவுட் சினிமா வரலாற்றில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் இப்படம் பான் இந்தியா திரைப்படமாக இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் சக்கை போடு போட்டு வருகிறது என்றால் அது மிகையல்ல. 


 



ஒட்டுமொத்த படக்குழுவினரின் உழைப்பு :


சோழ சாம்ராஜ்யத்தை பற்றின விறுவிறுப்பான இந்த பொன்னியின் செல்வன் கதை இரண்டு பாகங்களாக வெளியிடப்பட உள்ள நிலையில் செப்டம்பர் 30ம் தேதி இப்படத்தின் முதல் பாகம் திரையரங்குகளின் கோலாகலமாக திருவிழா போல் மேள தாளத்துடன் வெளியிடப்பட்டது. அனைவருக்கும் கதை புரியும் படி மிகவும் எளிமையாக பொன்னியின் செல்வன் நாவலை கண்முன்னே படமாக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்னம். ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர், இசைஅமைப்பிலார் மற்றும் அனைத்து தொழில் நுட்ப கலைநர்கள், நடிகர்கள் என அனைவரின் கூட்டு முயற்சியே இப்படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம். 


 







கேரளவில் வெற்றிக்கொடி நாட்டும் பொன்னியின் செல்வன் :


பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவுதும் வெளியாகின முதல் நாளிலேயே சுமார் 80 கோடியை வசூல் செய்து சாதனை படைத்தது. அந்த வகையில் கேரளாவில் வெளியான இப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. கேரளாவில் இப்படத்தை திரையரங்கில் வெளியிடும் உரிமையை கோகுலம் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. திரையரங்கு எங்கும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளால் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தற்போது கேரளா மாநிலத்தில் பொன்னியின் செல்வன் படம் எந்த இடத்தில் உள்ளது என்ற பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 


 






 


விஜய்யை பின்னுக்கு தள்ளிய மல்டிஸ்டாரர் படங்கள் :


இதுவரையில் நடிகர் விஜய்யின் கோட்டையாக இருந்த கோலிவுட் சினிமா இதுவரையில் முதலிடத்தில் இருந்த பிகில் திரைப்படம் தற்போது அப்படத்தை மூன்றாவது இடத்திற்கு தள்ளி எண்ணிக்கையின் அடிப்படையில் முன்னேறியுள்ளது லோகேஷ் கனகராஜின் விக்ரம் திரைப்படம் மற்றும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம். உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்ற விக்ரம் திரைப்படம் முதலிடத்திலும் அதை தெடர்ந்து இரண்டாவது இடத்தில்உள்ளது பொன்னியின் செல்வன திரைப்படம். விஜய்யின் கோட்டையான கோலிவுட்டில் அவரின் படம் அல்லாமல் இரண்டு மல்டிஸ்டாரர் படங்கள் புதிய சாதனைகளை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை அடுத்து கேரளாவில் "பொன்னியின் செல்வன்" திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது என்பது கோலிவுட் சினிமாவின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.