Veera Dheera Sooran: ஆக்ஷனில் ருத்ர தாண்டவம் ஆடிய சீயான் விக்ரம்! வெளியானது 'வீர தீர சூரன்' ட்ரைலர்!

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'வீர தீர சூரன்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

Continues below advertisement

சித்தார்த் நடிப்பில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற 'சித்தா' படத்தை எழுதி - இயக்கியவர் தான் இயக்குனர் அருண்குமார். இதற்கு முன் இவர் இயக்கிய பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாகும். சைலண்டாக தன்னுடைய அடுத்தடுத்த வெற்றியை தமிழ் சினிமாவில் பதிவு செய்து வரும், இயக்குனர் அருண் குமார் தற்போது நடிகர் விக்ரமை ஹீரோவாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் தான் 'வீர தீர சூரன்'.

Continues below advertisement

இரண்டு பாகமாக உருவாகியுள்ள இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை முதலில் ரிலீஸ் செய்து விட்டு, அதன் பின்னர் முதல் பாகத்தை ரிலீஸ் பண்ண படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன் படி, இப்படம் மார்ச் 27-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இந்த படத்தின் கிராண்ட் ட்ரைலர் லான்ச் இன்று நடைபெற்றது.

இதை தொடர்ந்து இந்த படத்தின் ட்ரைலர், சமூக வலைதளத்தில் இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் இரவு 8 மணிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் ஒரு சில காரணங்களால், இந்த அப்படத்தின் ட்ரைலரை 10 மணிக்கு மேல் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரைலரில் முழுக்க முழுக்க ஆக்ஷனில், விக்ரம் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார். ஒரே இரவில்... நடக்கும் விறுவிறுப்பான கதைக்களம் தான் இந்த படத்தின் கதை என்பது ட்ரைலரை பாக்கும் போது தெரிகிறது.

போலீஸ் அதிகாரியாக, எஸ்.ஜே.சூர்யா வழக்கம் போல தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷரா விஜயன் நடித்துளளார்.  ஜிவி பிரகாஷ் இசையமைதுள்ள இந்த படத்தி HR பிச்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரித்துள்ளார். 

தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் இதோ:

 

Continues below advertisement