லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் நடிப்பில் உலகளவில் கிழி கிழி என கிழித்து எடுத்த படம் "விக்ரம்". இதுவரையில் தமிழ் சினிமா வரலாற்றில் அதிகப்படியான வசூலை ஈட்டிய திரைப்படமாக திகழ்கிறது "விக்ரம்" திரைப்படம். மகத்தான வெற்றிபெற்ற இப்படத்தின் 100 நாள் கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது.






இப்படத்தில் விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், மாயா, பகத் பாசில், காயத்ரி, ஷிவானி, செம்பன் வினோத் என ஒரு பெரிய திரை பட்டாளமே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் நடிகர் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்த ஏஜென்ட் டீனாவின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக எதிர்பாராத நேரத்தில் அவரின் ஆக்ஷன் காட்சி பட்டையை கிளப்பியது என்றே சொல்லலாம். கிளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே நடிகர் சூர்யா நடித்திருந்தாலும் கனகச்சிதமாக ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் பொருந்தி இருந்தார். அவரின் நடிப்பு கைதட்டல் பெற்றது. விக்ரம் படத்தில் நடித்திருந்த ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் சிறப்பான தேர்வுகள். படத்திற்கு பெரும் பக்கபலமாய் அமைந்தது படத்தின் பின்னணி இசை. இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் சும்மா தெறிக்கவிட்டு இருக்கிறார். கமல்ஹாசன் காட்சிகள் வரும் போதெல்லாம் அரங்கமே அதிர்கிறது. 


கோவை எனக்கு மிகவும் பிடிச்ச ஊர்!


விக்ரம் திரைப்படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டம் சமீபத்தில் கோவையில் நடைபெற்றது. அப்போது அந்த விழாவில் பேசிய நடிகர் கமல், சுவாரசிய தகவல் ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். 






விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ் சீன் கோவையில் தான் எடுக்க வேண்டும் என எனக்கும் இயக்குநருக்கும் ஆசை. கோவை எனக்கு மிகவும் பிடித்த ஊர். அதற்காக செலவுகள் செய்து எல்லா ஏற்பாடுகளும் செய்து இங்கு செட் போட்டு விட்டோம். ஆனால் அதன்பின் எனக்கு கொரோனா வந்து விட்டது. அனைத்தையும் இங்கு இருந்து இடம் மாற்ற வேண்டிய சூழ்நிலை' என விக்ரம் திரைப்படம் குறித்த தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.


மேலும் விக்ரம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் 53வது படைத்த தயாரித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச வருடங்களில் நூறாவது திரைப்படத்தைத் தொட எனது வாழ்த்துக்கள் என்று ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் எனது பிறந்த வீடான ஏவிஎம் ப்ரொடக்ஷன்ஸ் 70 வருட வாழ்க்கையை கொண்டாடி இருக்கிறது. இப்படி பல பேர் முன்னோடிகளாக இருக்கும் தைரியத்தில் நான் பேசுகிறேன். கர்வத்தில் பேசவில்லை” என்று பேசி உள்ளார் நடிகர் கமல்ஹாசன்