மீண்டும் போட்டோ... பழைய அஸ்திரத்தை எடுத்த ரம்யா பாண்டியன்!
சூர்ய வெளிச்சம் கலந்த சூறாவளி போல் கவர்ச்சி படங்களை பகிர்ந்த ரம்யா பாண்டியன்

நடிகை ரம்யா கவனத்தை ஈர்க்கும் வகையில், கவர்ச்சியான போட்டோக்களை பதிவு செய்துள்ளார். தமிழில் ‘டம்மி டப்பாசு’ படத்தில் அறிமுகமான ரம்யா பாண்டியன், அதனைத்தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’படத்தில் நடித்தார். இந்தப் படம் இவருக்கு நல்லப்பெயரை பெற்றுத்தந்தது. அதன் பின் வாய்ப்புகள் வராமல் இருந்த அவர், மொட்டை மாடியில் இடுப்பு தெரிய எடுத்த கவர்ச்சிப்படங்களால் பேசு பொருளாக மாறினார் ரம்யா. அதனைத்தொடர்ந்து பிக்பாஸில் சீசன் 4 இல் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த சீசனில் கலந்து கொண்ட அவர் இறுதிப் போட்டி வரை முன்னேறினார்.
அத்துடன் சமீபத்தில் நடந்துமுடிந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட இவர் 3-ம் இடம் பிடித்தார். தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் லியோ ஜோஸ் பெல்லிஸ்ரி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிகை ரம்யா பாண்டியன் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Just In




இப்போது கவர்ச்சி படங்களின் 2.0 போல, ரம்யா பாண்டியன் கருப்பு நிற உடையில் க்ளாமரான போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.
பார்த்தவுடன் பத்திக்கும் புகைப்படத்திற்கு ஏற்றவாரு, “ சூர்ய வெளிச்சம் கலந்த சூறாவளி” என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு, இவரின் தங்கை கீர்த்தி பாண்டியன் ஃபையர் ஃபையர் ஃபையர் என்றும், பிரபல தொகுப்பாளினி ப்ரியங்கா தேஷ் பாண்டே வாவ் என்றும் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.
முன்னதாக, ரைஃபில் ஷூட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.