விஜய்
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து அவர் மீதான ஊடக கவனம் என்பது பல மடங்கு அதிகரித்துள்ளது. அவர் மீது மட்டுமில்லாமல் அவரது படங்கள் மீதும்தான். விஜய் நடித்த சூப்பர்ஹிட் படங்களான கில்லி , குருவி, உள்ளிட்ட படங்கள மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.
விஜய் நடிக்கப்போகும் கடைசி படமான தளபதி 63 படம் குறித்தும் ஓயாத விவாதம் நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்டர் ரீரிலீஸ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் மாஸ்டர். விஜய் , விஜய் சேதுபதி , மாளவிகா மோகனன் , சாந்தனு , கெளரி கிஷன் , ஆண்டிரியா , அர்ஜூன் தாஸ் , உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து 7 ஸ்கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. கொரோனா பெருந்தொற்று ஓரளவிற்கு குறைந்த பின் திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் படம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்தது.
வழக்கமான விஜய் கதாபாத்திரங்களைப் போல் இல்லாமல் ஜே.டி என்கிற கதாபாத்திரத்தில் விஜயை வைத்து அழகு பார்த்திருந்தார் லோகேஷ் . விஜய் சேதுபதி வில்லனாகவும் அனிருத் வாத்தி கமிங் போன்ற தரமான பாடல்களும் சேர்ந்து இப்படத்தை ரசிகர்களுக்கு ஸ்பெஷலான ஒரு படமாக அமைந்தது.
ஆனால் கொரோனா நோய்த்தொற்று காரணமாக இப்படத்தை தமிழ்நாடு தவிர பரவலாக பிற நாடுகளில் வெளியிட முடியாத சூழல் இருந்தது. இந்த குறையை தீர்க்கும் வகையில் தற்போது விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் UK முழுவதும் மீண்டும் வெளியாக இருக்கிறது.
அஹிம்சா என்டர்டெயின்மெண்ட இப்படத்தை வெளியிட இருக்கிறது. வெளிநாடுகளில் வசிக்கும் விஜர் ரசிகர்கள் விஜய் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விஜய் நடிப்பில் வெளியான பல்வேறு சூப்பர் ஹிட் படங்கள் அவரது பிறந்தநாளன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவுப்புகள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.