சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி நல்ல பெயரை மட்டுமே சம்பாதித்தவர்கள் தனித்தனியே இருக்கிறார்கள். ஆனால், இரண்டிலும் நல்ல பெயரைமட்டும் சம்பாதித்தவர் என்றால் அது விஜயகாந்த் தான். 1979 ஆம் ஆண்டு இனிக்கும் இளமை திரைப்படம் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகமானவர் விஜயகாந்த். ஆனால் 1980 ஆம் ஆண்டு வெளியான தூரத்து இடி முழக்கம் படம் தான் அவரை அனைவரிடத்திலும் பரீட்சையமாக்கியது. 


சுமார் 150 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் விஜயகாந்த், சினிமா என்னும் கலையை வசூலுக்காக மட்டும் என்றல்லாமல் எல்லா தரப்பு மக்களும் பயனடையவேண்டும் என்று நினைத்தவர் . தனக்கு போட்டியாக கருதப்பட்ட சக நடிகர்களையும் அனுசரித்து அரவணைத்து சென்றதால் இன்றும் அனைவருக்கும் பிடித்தமான நடிகராக விஜயகாந்த் உள்ளார்.


இந்நிலையில் விஜயகாந்த் இன்று தனது 70தாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பிறந்தநாள் வாழ்த்துகளால் ட்விட்டர் பக்கம் நிரம்பி வழிகிறது.