அண்மையில் ஊடகம் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் நேர்காணலில் பேசியிருந்தார். அதில், விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் குறித்து விஜய் சொன்ன கருத்து என்ன எனக் கேள்வி எழுப்பபபட்டது. அதற்கு பதிலளித்து பேசிய லோகேஷ் கனகராஜ், ”விக்ரம் படத்தில் ரோலக்ஸாக சூர்யா நடித்திருந்ததை விஜய் குறிப்பிட்டு பேசினார். அவருக்கு சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் மிகவும்பிடித்து போனது. ரோலக்ஸின் லுக், காட்சியமைப்பு சூப்பராக இருந்தது எனக் கூறி விஜய் பாராட்டினார்” என்றார். 






லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்கள் தென்னிந்திய சினிமாவில் மாஸ்டர் ஹிட் ஆன படங்கள். இதனால் லோகேஷின் கூட்டணி எல்சியு என அழைக்கும் அளவுக்கு பிரபலமானது. நீண்ட இடைவெளிக்கு பிறகு லோகேஷ் கனகராய் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுகிறது. இதில், பெயரிடப்படாத கேரக்டரில் கமல்ஹாசனும், முக்கிய ரோலில் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசிலும் நடித்திருப்பார்கள். படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளில் ரத்தம் உறைய வைக்கும் அளவுக்கு ரோலக்ஸ் கதாபாத்திர காட்சிகளில் வரும் சூர்யா ரசிகர்களை வெகுவாக ஈர்த்து அப்ளாஸ் அள்ளினார்.


ஹீரோவாக மட்டுமே பார்க்கப்பட்ட சூர்யா, வில்லன் கேரக்டரில் கெத்து காட்டுவதை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் டிரெண்டிங்கிலும் அசத்தியது. இந்த நிலையில் விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கேரக்டரை பார்த்து விஜய் அசந்து போனதாக லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் வரும் 19ஆம் தேதி ரிலீசாக உள்ளது. 


ஏற்கெனவே படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் திரையில் லியோவை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் முதல் காட்சி காலை 9 மணிக்கும், கேரளா மற்றும் கர்நாடகாவில் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கும் திரையிடப்பட உள்ளது. இதற்கிடையே லியோ படத்தின் புரோமோஷனுக்காக ஊடகங்களுக்கு பேட்டியளித்து வரும் லோகேஷ் கனகராஜ், விஜய் குறித்த தகவல்களை பகிர்ந்து வருகிறார். 


மேலும் படிக்க: Vidaamuyarchi Art Director: அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் சோகம்.. கலை இயக்குநர் திடீர் மரணம்..


Rohini Theatre: ”இனிமேல் ஆக்‌ஷன் தான்.. கொஞ்சம் கூட எங்களை யோசிக்கவில்லை” .. ரசிகர்களுக்கு ரோகிணி தியேட்டர் எச்சரிக்கை..!