விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பெரும்பான்மையான டி.வி. ஷோக்கள், சீரியல்களுக்கு ரசிகர்களுக்கு மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும். பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்று பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
விஜய்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், மௌன ராகம், ராஜாராணி, பாக்கியலட்சுமி போன்ற சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும், ரியாலிட்டி ஷோக்களுக்கும் ரசிகர்கள் அதிகளவு ஆதரவை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விஜய் டிவி ஷோக்களுக்கு ஒருபுறம் ஆதரவு இருந்து வந்தாலும், அதே அளவு சர்ச்சையையும் அவ்வபோது சந்தித்து வருகிறது. சமீபத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகள் கலந்துகொண்டு தங்கள் குரல் மூலம் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து, வாரம் வாரம் ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சி நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இதன் இறுதி போட்டியில் கிரிஷாங், ரிஹானா, அபீனா, ட்ரினிடா, நேஹா என்ற குழந்தைகள் தகுதி பெற்றனர். இறுதி போட்டியில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கலந்து கொண்டு வின்னர், ரன்னர்களை அறிவித்தார். இதில், சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8 பட்டத்தை கிரிஷாங் கைப்பற்ற, இரண்டாவது இடத்தை ரிஹானா தட்டி சென்றார்.
முதல் பரிசு பெற்ற கிரிஷாங்க்கு 60,000,00 மதிப்புள்ள வீடும், இரண்டாவது இடம் பிடித்த ரிஹானாக்கு 5 லட்சம் பணம் வழங்கப்பட்டது. இந்த சூழலில், நாங்கள் ஓட்டு அளித்த செய்த நேஹாவுக்கு பட்டம் வழங்காமல் கிரிஷாங்க்கு விஜய் டிவி வழங்கிவிட்டதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் இவர்கள் இரண்டு பேர்களை விட நேஹா சிறப்பாக பாடினார். ஆனால் அவருக்கு எப்படி மூன்றாவது இடம் வழங்கப்பட்டது என்று ஒரு சிலர் நேரடியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்