விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் தான் இந்த சேனலில் தற்போது டி.ஆர்.பியில் முதல் இடத்தில் உள்ளது. இந்த சீரியலின் கதைக்களமும் தற்போது விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
கடந்த சனிக்கிழமை எபிசோடில் விஜயா வீட்டின் பத்திரத்தை அடகு வைத்து பணம் பெற்றவருக்கு வட்டி செலுத்தாததால் விஜயாவை அவர்கள் பிடித்து வைத்துக் கொண்டனர். இதனையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டனர். பின் வீட்டில் வைத்து முத்து ஏன் கடன் வாங்கினிங்க என்று விஜயாவிடம் கேள்வி கேட்டு துளைத்து எடுக்கிறார்.முத்துவின் அப்பாவும் தொடர்ந்து கேள்வி கேட்டதால், விஜயா வேறு வழியில்லாமால் ரோகினி பார்லர் ஆரம்பிப்பதற்காக பணத்தை வாங்கி கொடுத்ததாக ஒப்புக் கொண்டார்.
மேலும் அந்த பணத்தை 4 நாட்களில் ரோகிணி திருப்பி கொடுத்து விடுவார் என்றும் விஜயா சவால் விட்டார். இத்துடன் சனிக்கிழமை எபிசோட் நிறைவடைந்தது. இன்றைய எபிசோடில் மீனா ரூமில் முத்துவிடம் அத்தை ரொம்ப பாவம் அங்க ரொம்ப அழுது புலம்பிட்டு இருந்தாங்க என்று சொல்ல முத்து அவங்களா பாவம்? எவ்வளவு பெரிய வேலை பார்த்து இருக்காங்க என்று கூறுகிறார்.
மறுபக்கம் சவால் விட்ட விஜயா, பணத்துக்கு என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறார். மறுபுறம் மீனா பணத்தை எப்படி தருவாங்க ஒரு வேலை ரோகினி அப்பாகிட்ட கேப்பாங்களோ என்று பேசிக் கொண்டிருக்கும் போது, அதை கேட்ட விஜயாவுக்கு இதே யோசனை தோன்றுகிறது.ரோகினியிடம் செல்லும் விஜயா, உன் அப்பா கிட்ட பணத்தை கேளு, இப்போ நம்முடைய மானத்தை காப்பாத்திக்க இத விட்டா வேற வழி இல்லை என்கிறார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடையும் ரோகிணி, வேறு வழி இல்லாமல் நான் பேசுகிறேன் என்று கூறுகிறார்.பின்னர் பியூட்டி பார்லர் செல்லும் ரோகிணி தன்னுடைய தோழியிடம் பணத்துக்கு என்ன பண்றதுன்னு தெரியல என்று புலம்பிக் கொண்டிருக்க அந்நேரம் பார்த்து பிஏ போன் செய்து என்ன ரோகிணி நான் தான் உன் தாய் மாமன் வசீகரன் பேசுகிறேன் என ஷாக் கொடுக்கிறார்.
நான் உன் வீட்டில் உண்மைய சொல்லாம இருக்க, எனக்கு மாச மாசம் 50 ஆயிரம் ரூபாய் பணம் தரணும் என்று கூறி அதிர்ச்சி கொடுக்கிறார்.தன்னுடைய பியூட்டி பார்லர் கனவை விட இந்த வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்வது தான் முக்கியம் என யோசிக்கும் ரோகிணி, பியூட்டி பார்லரை வேறு ஒரு பிராண்டிற்கு மாற்ற முடிவு செய்கிறார். இது சம்பந்தமாக அவர்களைச் சென்று சந்திக்க 12 லட்சம் ரூபாய் பணத்தை தருவதாக சொல்ல ரோகிணியும் சம்மதம் தெரிவிக்கிறார்.
பின் தன்னுடைய தோழியிடம் இதெற்கெல்லாம் காரணம் அந்த மீனா தான், அவளை நான் சும்மா விடமாட்டேன் ஏதாவதுவிஷயத்துல மாட்டட்டும் அப்போ இருக்கு அவளுக்கு என கோபமாக கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.
மேலும் படிக்க: Sivakarthikeyan: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸூடன் இணையும் சிவகார்த்திகேயன்.. அப்ப நெக்ஸ்ட் பிளான் அதுதானா?