Vanangaan First Look: “ஆன்மீகமும் அடிப்படை அறிவும்” - வருகிறான் ‘வணங்கான்’ - முரட்டு லுக்கில் அருண்விஜய்!

நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்குநர் பாலா இயக்கி வரும் ‘வணங்கான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

Continues below advertisement

நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்குநர் பாலா இயக்கி வரும் ‘வணங்கான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

Continues below advertisement

சேது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பாலா. தொடர்ந்து நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர் என்ற பெயரை பெற்றுள்ளார். இதில் நந்தா, பிதாமகன் படங்களில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடித்திருந்தார்.

இதற்கிடையில் பாலா 18 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சூர்யாவுடன் பாலா இணையப் போவதாக அறிவிப்பு வெளியானது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ‘வணங்கான்’ என பெயரிடப்பட்ட அந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிப்பதாக இருந்தது. ஹீரோயினாக க்ரீத்தி ஷெட்டியும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நாகர்கோவிலில் நடைபெற்ற நிலையில் சூர்யாவுக்கும், பாலாவுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது என பிரச்சினை தொடங்கியது. 

ஆனால் வணங்கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் வெளியான நிலையில், படத்தின் கதையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சூர்யா இப்படத்தில் விலகுவதாக அறிவித்தார். பாலாவும் சூர்யாவுக்கு இந்த கதை செட்டாகுது என அறிக்கை வெளியிட்டார். 2டி நிறுவனமும் தயாரிப்பில் இருந்து பின்வாங்க, வணங்கான் படம் உருவாகுமா என்ற கேள்வி எழுந்தது.

இப்படியான நிலையில் பாலா தனது பி ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம்  மற்றும் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘வணங்கான்’ படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோயினாக  ரோஷினி பிரகாஷ் இணைந்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். மேலும் மிஷ்கின், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 

இதனிடையே வணங்கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. இதில் ஒரு கையில் பெரியார் சிலை, இன்னொரு கையில் பிள்ளையார் சிலை என உடல் முழுக்க சேறு பூசப்பட்ட நிலையில் அருண் விஜய் இருப்பது போல காட்சி இடம் பெற்றுள்ளது. இதனைப் பார்க்கும்போது நிச்சயம் சமூகத்தில் நிலவும் ஏதோ ஒரு பிரச்சினையை தான் பாலா கையில் எடுத்துள்ளார் என சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனை பார்க்கும்போது சிலை செய்யும் கேரக்டரில் அருண் விஜய் வருவார் என சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இங்கு காலத்தை வெல்வது முக்கியம். நம் முன்னே எத்தனை சமர் வரினும் நின்று எதிர்கொண்டு இன்று தனக்கென படைப்பாற்றலில் மிகச் சிறந்த இடத்தை தக்க வைத்திருக்கும் நம் தமிழ்சினிமாவின் வரம்,  இயக்குநர் அண்ணன்  பாலா அவர்கள்.   அவரது இதுவரையிலான படைப்புகள் மக்கள் மத்தியில் அதிர்வுகளை உருவாக்கியுள்ளன.   அதேபோல இன்று #வணங்கான் படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. பெரும் அதிர்வை ஏற்படுத்தும் ஒரு கதையைத் தொட்டிருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம். சகோதரர் அருன்விஜய்க்கு இது மற்றுமொரு பெயர் சொல்லும் அவதாரம்.   இனி உங்கள் கோணத்திற்கே விட்டுவிடுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola