Sivakarthikeyan: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸூடன் இணையும் சிவகார்த்திகேயன்.. அப்ப நெக்ஸ்ட் பிளான் அதுதானா?

சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தான் தயாரித்திருந்தார். அப்படத்தில் ஒரு பாடலிலும் தலைகாட்டியிருப்பார். 

Continues below advertisement

நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23வது படத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

Continues below advertisement

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக சிவகார்த்திகேயன் உருவாகியுள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ள அவர் கடைசியாக ‘மாவீரன்’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஜூலை மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். தீபாவளிக்கு வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்ட இப்படம், கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இருக்கும் காரணமாக 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் அவரின் அடுத்தப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்துள்ளார். சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தான் தயாரித்திருந்தார். அப்படத்தில் ஒரு பாடலிலும் தலைகாட்டியிருப்பார். 

இப்படியான நிலையில் முதல்முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணி இணைந்துள்ளது. இன்றைய தினம் முருகதாஸ் பிறந்தநாள் என்பதால் அவருக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் முருகதாஸ் சார். உங்களுடன் என்னுடைய 23வது படத்தில் இணைவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் கூறிய கதையை கேட்டபின் என்னுடைய மகிழ்ச்சி இரட்டிப்பாகியுள்ளது. இந்த படம் எனக்கு எல்லா விதங்களிலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். மேலும் படப்பிடிப்பை தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

இதற்கு பதிலளித்துள்ள ஏ.ஆர்.முருகதாஸ், “மிக்க நன்றி சிவா! அடுத்த படத்தில் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி! நாம் இணைந்து சில சினிமா மாயாஜாலங்களை உருவாக்குவோம்!” என தெரிவித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக, ‘சீதா ராமம்’ புகழ் மிருணாள் தாகூர் தமிழில் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அனிருத் இசையமைக்க உள்ளார். அதேபோல் சிவகார்த்திகேயன் தன் சினிமா கேரியரை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கமர்ஷியல் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்த, தொடர்ந்து முன்னணி இயக்குநருடன் கமிட்டாகி வருகிறார்.அந்த வகையில் தான் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola