தற்போது உள்ள காலக்கட்டத்தில் விஜய் டிவியில்தலை காட்டி விட்டாலே போதும் பெயரும் புகழும் தானாகவே வந்துவிடும். நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் சந்தானம்,யோகி பாபு, விஜய் டிவி ராமன், அறந்தாங்கி நிஷா, குக் வித் கோமாளி புகழ், பாலா,சிவாங்கி எனப் பலரும் விஜய் டிவியால் இந்த உலகத்தில் வெளிச்சத்திற்கு வந்து இன்று வெள்ளித்திரையை வட்டமடித்து வருகின்றனர். 


அந்த வரிசையில், தீனா மற்றும் சரத்தின் காமெடி செட்அப் விஜய் டிவியில் எப்பொழுது டாப்டப் தான். இருவரும் இணைந்து செய்யும் சேட்டைகளுக்கு ஒரு அளவே இருக்காது. தீனா ஒரு கட்டத்தில் சின்னத்திரையில் இருந்து விலகி வெள்ளித்திரைக்கு சென்றாலும், அவ்வபோது விஜய் டிவியில் பிராங்க் கால் செய்தும், ஒரு சில நிகழ்ச்சியில் தலைகாட்டியும் வருகிறது.


ஆனால், அவருடன் பணியாற்றிய சரத், விஜய் டிவியில் சமீபத்தில் நடந்த மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை சீசன் 3- நிகழ்ச்சியில் அவரது மனைவி கிருத்திகா கலந்து கொண்டு அனைத்து டாஸ்க்குகளிலும் அசத்தி, பட்டத்தை வென்றனர். 


விஜய் டிவியில் வரும் பிரபலங்கள் அனைவரும் தற்போது தங்களுக்கென்று ஒரு யூடியூப் சேனல் ஒரு வைத்து வலம் வருகின்றனர். குக் வித் கோமாளி புகழ் முதல்,மணிமேகலை, என அனைவரும் தாங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்தும், வெளியூர் பயணங்கள் குறித்து அவர்கள் வைத்திருக்கும் யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகின்றனர். 



அந்த முயற்சியை தற்போது சரத்தும் கையில் எடுத்துள்ளார். அவரும் அவரது மனைவி கிருத்திகாவும் இணைந்து சமீபத்தில் ப்ரிட்ஜ் டூர் ஒன்று செய்து பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெரும்பாலும் அனைவரது வீடுகளிலும் உள்ள ப்ரிட்ஜில் முதல்நாள் மிஞ்சிய குழம்பு, காய்கறி, சட்னி என்று ஏதாவது ஒன்று இருக்கும். ஆனால், சரத் வீட்டில் உள்ள ப்ரிட்ஜில் தீவாளிக்கு வாங்கி வைத்த ஊசி போன அதிரசம், அழுகிப்போன கத்திரிக்காய் என்று ஆகாத போகாத அனைத்தும் அனாதையாய் இருக்கிறது. சரத் சும்மா இல்லாம எங்க பிரிட்ஜில 90 நாள் வரைக்கும் வச்சது வச்சமாதிரியே இருக்கும்ன்னு.. சொல்லிட்டு கெட்டு போன கத்திரிக்காய் எடுத்து காமிக்கிறார். 


தொடர்ந்து, காய்ந்துபோன எலுமிச்சை, உதிர்ந்துபோன கருவேப்பிலை என அடுத்தடுத்து பட்டியலில் இடம் பெற, ஒரு வழியாக ப்ரிட்ஜ் டூர் சர்வ நாசமாய் இல்லை இல்லை அம்சமாய் முடிந்தது. கொடுமையிலும் கொடுமை சரத் மனைவி டூருக்கு முன்னாடி க்ளீன் வேற செஞ்சாங்கலாம்..க்ளீன் பண்ணியே இப்படினா இதுக்கு முன்னாடி என்று புலம்பும் விஜய் டிவி ரசிகர்கள்...




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண