விஜய் டிவியில் கலக்கப் போவது சாம்பியன் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, அதில் தனித்துவம் பெற்று, பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அதீத கவனம் பெற்று, அந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமானவர் புகழ். பெயருக்கு ஏற்றார் போல, விஜய் டிவி புகழாக மாறி வரும்அவர், தனது நீண்ட கால தோழி பென்சியாவை மணந்துள்ளார்.
விஜய் சேதுபதி படம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம், நடிகர் சந்தானத்தில் ஏஜண்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் புகழ், சின்னத்திரையிலிருந்த வெள்ளித்திரையில் படுபிஸியாக உள்ளார். தனது காதலி குறித்து, கடந்த சில நாட்களாகவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்து புகழ், அது தொடர்பான பதிவுகள் மூலம், லக்ஸ்களை அள்ளி வந்தார்.
இந்நிலையில் இன்று காலை , அவர்களது திருமணம், உறவினர்கள் சூழ சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிலையில் தனது அன்பு காதல் மனைவிக்கு பங்களா வாங்கப் போவதாக கூட புகழ் அறிவித்திருந்திருந்தார். அந்த அளவிற்கு இவர்களது காதல், அனைவரும் அறியும் படியாக வெளிப்படையாக இருந்தது.
விழுப்புரம் மாவட்டம் தீபனூரில் உள்ள பொய்யாமொழி விநாயகர் கோயிலில் நடந்த திருமணத்தில், இந்து முறைப்படி அனைத்து சம்பிரதாயங்களும் நடைபெற்றன. மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் சூழ உறவினர்கள் வாழ்த்த, சுபநிகழ்வாக நடந்து முடிந்தது புகழ் திருமணம். பிரபலங்கள் பலரும் புகழுக்கு சமூகவலைதளங்களில் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
செப்டம்பர் 5 ம் தேதி திருமணம் நடைபெறும் என முன்பு தகவல் வெளியான நிலையில் செப்டம்பர் 1 ம் தேதியே திருமணத்தை முடித்துள்ளார் புகழ். அனேகமாக செப்டம்பர் 5 ம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறலாம் என கூறப்படுகிறது. இதில் சின்னத்திரை, வெள்ளத்திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.