மயிலாடுதுறை மாவட்டம் மொழையூர், மண்தாங்கி திடல் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி என்பவரின் மகள் 28 வயதான ரம்யா. இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு அவருடன் பணிபுரிந்த திருநெல்வேலி வள்ளியூர் கூத்தங்குடி பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்பவரின் 36 வயதான மகன் குமார் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அதனை தொடர்ந்து இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் குமார் தொடர்ந்து குடிபோதையில் தகராறு செய்வதும், கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவு செய்வதுமாக இருந்துள்ளார். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். குமார் பட்ட கடனை ரம்யா மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் உள்ள ஒரு பேக்கரியில் பணிபுரிந்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டு அடைத்து வந்துள்ளார்.
Cobra Movie First Review: வெளியான கோப்ரா ரிவியூ! விக்ரமுக்கு இது மைல்கல்! புகழ்ந்துதள்ளிய முக்கிய நபர்!
இந்த சூழலில் நேற்றிரவு இரவு குமார் குடிபோதையில் ரம்யா வீட்டிற்கு வந்துள்ளார். தொடர்ந்து அவர் தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த ரம்யா அரிவாளை எடுத்து வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து ரம்யாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தொடர்ந்து பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி பல்வேறு பட்ட மக்களும் கோரிக்கை வைத்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு அதுகுறித்து செவி சாய்க்காது, மது விற்பனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மது விற்பனையால் மது குடித்துவிட்டு வாகனங்களை இயக்கி பெரு விபத்துக்களை ஏற்படுத்தி பல உயிர்களை காவு வாங்கி வருவதாகவும், அதுமட்டுமின்றி மதுபோதையில் ஏற்படும் பிரச்சினையால் ஒருவரை ஒருவர் தாக்கி கொலை செய்யும் சம்பவங்களும், இதுபோன்று கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்படும்போது அதில் ஏற்படும் விளைவால் பல பெண்கள், குழந்தைகள் என பலரது வாழ்க்கை பாழாகி வருவது தமிழகத்தில் தொடர்ந்து வருவதாகவும், இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு அரசு மதுபான கடைகளில் வரும் வருவாய்க்கு மாற்று வழி செய்து தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Crime : அதிர்ச்சி...குடும்ப கட்டுப்பாடு செய்துகொண்ட நான்கு பெண்கள் மரணம்...நடந்தது என்ன?
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண:
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற