இன்ஸ்டாவில் வடிவேலுவின் பேமஸ் டயாலக்கை ரீல்ஸ் வீடியோவாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் அனைத்துச் சீரியல்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்த வரிசையில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிப்பரப்பாகிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு சிறுவர்கள் முதல் பெண்கள், ஆண்கள், முதியவர்கள் என அனைத்தரப்பட்ட ரசிகர்களும் உள்ளது. ஒற்றுமையுடன் வாழும் நான்கு அண்ணன் தம்பிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சீரியல். குறிப்பாக இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சித்ராவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம். ஆனால் என்ன இவரின் மரணத்திற்கு பிறகு ரசிகர்கள் மிகுந்த ஏக்கத்தில் இருந்த நிலையில் தான், முல்லையாக காவ்யா களமிறங்கி நடித்துவருகிறார்.





இப்படி சுமுகமாக சென்றுக்கொண்டிருந்த கதைக்களத்தில் புதிய கேரக்டரில் வந்தவர் தான் சாய் காயத்ரி. இதன் பிறகு எப்போதும் சில சில பிரச்சனைகளைத் தான் இந்த குடும்பம் சந்தித்துவருகிறது. தற்போது பல பிரச்னைகளுக்கு பிறகு பாண்டியன் சூப்பர் ஸ்டோர்ஸையும் திறந்துவிட்டனர். இப்படி சீரியல் வாழ்க்கை நகர்ந்துக்கொண்டிருக்கும் வேளையில் இச்சீரியலில் நடித்து வரும் ஒவ்வொருவரும் தனித்தனியாக யூடியூப் சேனல்கள் நடத்தியும், இன்ஸ்டாவில் ரீல்ஸ்களையும் பதிவிட்டுவருகின்றனர். குறிப்பாக மீனாவாக நடிக்கும் ஹேமா, சரவணன், மீனாவின் அம்மா ஸ்ரீவித்யா, சாய் காயத்ரி, சுஜிதா என அடுக்கிக்கொண்டே போகலாம்.


 






இந்நிலையில், தற்போது பாண்டியன் சூப்பர் ஸ்டோர்ஸ் கடை திறப்பு விழா சூட்டிங் முடிந்த நிலையில், அக்கடையினுள் அமர்ந்தப்படி ரீல்ஸ் வீடியோவை இக்குடும்பத்தினர் வெளியிட்டனர். சாய் காயத்ரி, ஹேமா சதீஷ், ஸ்ரீவித்யா, கம்பன் மீனா ஆகியோர் வடிவேலுவின் பேமஸ் டயலாக்கை ரீல்ஸ் வீடியோவாக  வெளியிட்டுள்ளனர். அதில், “நான் வேணாம் னு  சொன்னேன். இவன் தான், நானும் வேணாம் தான் வேணாம்னு சொன்னேன். இவன் தான், நானும் வேணாம்னு தான் சொன்னேன் நான் தான் என்ற வடிவேலு காமெடியின் ரீல்ஸ் வீடியோவை வெளியிடவே ரசிகர்கள் இதற்கு பல்வேறு கமெண்ஸ்களைப் பதிவிட்டுவருகின்றனர். குறிப்பாக, “ இங்கேயே செல்ட் ஆகிடீங்களா? சூப்பர், ஹேப்பி சன்டே என்பது போன்று பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்துவருகின்றனர்.