தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சியாக வலம் வருவது விஜய் டி.வி. இந்த தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் பிக்பாஸ், குக்வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் புத்தம் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த வைதேகி காத்திருந்தாள் என்ற தொடர் திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால், அந்த தொடரின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில், அந்த ஸ்லாட்டில் புதிய தொடர் ஒன்று விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. சிப்பிக்குள் முத்து என்று பெயரிடப்பட்ட இந்த தொடர் இனிமேல் வைதேகி காத்திருந்தாள் ஒளிபரப்பான நேரத்தில் ஒளிபரப்பான நேரத்தில் ஒளிபரப்பாக உள்ளது.
இதற்கான பூஜை தற்போது நடைபெற்றுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தொடரில் நடிக்க உள்ள நடிகர்கள், நடிகைகள் பற்றி அறிவிப்புகள் வெளியாகவில்லை. முக்கிய நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிற நடிகர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா, பாக்யலட்சுமி ஆகிய தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், புதியதாக ஒளிபரப்பாக உள்ள சிப்பிக்குள் முத்து தொடருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வித்தியாசமான ஷோ, டான்ஸ் ஷோ, காமெடி ஷோ, டாக் ஷோ என்று விதவிதமான நிகழ்ச்சிகள் மூலமாக ரசிகர்களை தன் பக்கம் வைத்திருக்கும் விஜய் தொலைக்காட்சியின் சீரியலுக்கு என்றும் ஏராளமான ரசிகர்கள உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்