தமிழ்நாடு:
- தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.
- விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உரையாடினார்.
- திருவல்லிக்கேனி பார்த்தசாரி கோயிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை டெல்லி பயணம் செய்துள்ளார்.
- தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்வளத்துறை ஆய்வில் தகவல்.
- தனியார் கல்லூரிகளில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு; வழக்குப்பதிவு செய்ய சிபிசிஐடி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்தியா:
- உக்ரைனில் இருக்கும் அனைத்தும் இந்தியர்களும் பத்திரமாக அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய அரசு உறுதி.
- உக்ரைன் போர் காரணமாக மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
- டெல்லியில் சொந்த காரில் பயணிக்கும் போது முகக்கவசம் அணிய தேவையில்லை.
- பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு
உலகம்:
- உக்ரைனை அனைத்து வகைகளிலும் தாக்க ரஷ்யா அரசு உத்தரவிட்டுள்ளது.
- உக்ரைன் தலைநகர் உட்பட பல இடங்களில் ரஷ்யா வெடிகுண்டு தாக்குதல் செய்து வருகிறது.
- உக்ரைனிலிருந்து 250 பேருடன் இரண்டாவது இந்திய விமானம் இன்று காலை டெல்லி வந்தது.
- ரஷ்ய படைகளை சமாளிக்க உக்ரைனிற்கு ஜெர்மனி ஆயுதம் வழங்கியுள்ளது.
- ரஷ்ய தாக்குதலால் உக்ரைனிலிருந்து 1.20 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐநா தகவல்.
விளையாட்டு:
- இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்று அசத்தியுள்ளது.
- இந்தியா-இலங்கை அணிகளுக்கு எதிரான 3ஆவது டி20 போட்டி இன்று மாலை தர்மசாலாவில் நடைபெறுகிறது.
- மெக்சிகோ ஓபன் டென்னிஸ் அரையிறுதிச் சுற்றில் ரஃபேல் நடால் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்